பெண்களை கொச்சைப்படுத்திய உதயநிதிக்கு அமைச்சர் பதவியா? விலைவாசி உயர்வுக்கு முதலமைச்சர் பதில் சொல்லியாக வேண்டும்!

0
125

திமுக அரசைக் கண்டித்து சென்னை மயிலாப்பூர் வடக்கு பகுதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடக்கு பகுதி செயலாளர் பி. கணேஷ்பாபு தலைமையில், தென்சென்னை தெற்கு(கி) மாவட்ட செயலாளர் வேளச்சேரி எம்.கே. அசோக் எக்ஸ்.எம்.எல்.ஏ. முன்னிலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும், கழக செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன், முன்னாள் எம்.பி.யும், அம்மா பேரவை இணை செயலாளருமான டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் உரையாற்றும்போது, “பொய் வாக்குறுதி கொடுத்து திமுகவினர் ஆட்சியில் அமர்ந்துவிட்டார்கள். ஆட்சிக்கு வந்த பின்னால் விலை உயர்வு என்ற பரிசைத்தான் அவர்கள் மக்களுக்கு தந்திருக்கிறார்கள். அவர்கள் செய்வது உங்களது சேமிப்பை கரைக்கும் செயல், விலைவாசியை உயர்த்தும் செயல். மின்கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வு மூலம் அடித்தட்டு மக்கள் மட்டுமின்றி வியாபாரிகள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

வரிகளை, கட்டணங்களை உயர்த்தி, கஜானாவை நிரப்பி, புதிய திட்டங்கள் போடுகிறோம் என்ற பெயரில் விஞ்ஞான ரீதியாக திமுக அரசு கொள்ளை அடிக்கிறது. ஆட்சியின் மீதான வெறுப்பு மககளுக்கு அதிகரித்துவிட்டது. இந்த அரசு 2024ம் ஆண்டே வீட்டுக்குபோகின்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது. தன்னுடைய மகனை முதலமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார். இதைப்பற்றி மட்டுமே அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். மகளிரை கொச்சைப்படுத்தி பேசிய உதயநிதியை ஒரு துறையின் அமைச்சராக நியமித்திருக்கக் கூடிய அவல நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த குடும்ப ஆட்சியை வீட்டு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசும்போது, “திமுக அரசு மக்களை வஞ்சித்துக்கொண்டு இருக்கிறது. சொத்துவரி, பால், பால் பொருட்கள், மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விலைவாசி விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது. திமுகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். அதிமுக நல்லாட்சி கொடுத்ததே, நல்ல திட்டங்களை கொடுத்தார்களே என்று தமிழக மக்கள் புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.

ஆடு, மாடு மேய்ப்பவனுக்குக் கூட பாலுக்கு ஜிஎஸ்டி இல்லை என்பது தெரியும். ஆனால், துறை அமைச்சருக்கு அது தெரியவில்லை. ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு என்பது அநியாயமில்லையா? இதுபற்றி எந்தக் கட்சி கேட்கிறது? மக்களுக்காக கேட்பது அதிமுக மட்டும்தான். ரூ.80 கோடிக்கு கடலில் பேனா சின்னம் வைக்க திட்டமிடுகிறார்கள். அது நாதஸ்வரம் மாதிரியே இருக்கிறது. கீ கொடுத்த ரோபோ மாதிரி முதலமைச்சர் செயல்படுகிறார். அதிமுக-வில் இருந்து போனவர்கள்தான் மந்திரிகளாகி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு குறித்து முதலமைச்சர் பதில் சொல்லியாக வேண்டும். விலைவாசி உயர்வுக்கு தீர்வு கேட்டால் உதயநிதி அமைச்சராவதுதான் தீர்வு என்றார்கள். உதயநிதி வந்தாச்சு, அவர் பால் விலையை மட்டுமல்ல, பால்டாயில் விலையையும் கூட்டுவார். குடும்ப ஆட்சி நடத்தி, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டிக் கொழுத்து, சட்டம் ஒழுங்கை சீரழித்து மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் வி.எஸ். ராஜாராம், பகுதி செயலாளர் கே.ஆர். காசிநாதன், வட்ட செயலாளர்கள் ஆர். சுரேஷ், கலைசேகர் மற்றும் நிர்வாகிகள் கோ. ஆனந்தன், க.பா. நாகமணி, எஸ்.வி. ஜெயபார்த்தீபன், வீ. வெங்கட்ராமன், எஸ். ராஜன், பெ. சீனிவாசன், ஜெ. பாலமுருகன், ஆர். துரைக்கண்ணு, இ. சரவணன், எஸ்.ஏ. சரஸ்வதி, ஏ. விஜயா, அம்மா கோபி, பேரவை செல்வம், ஐ.டி. விங் ஜீவா, எல். ராஜேஷ், ஏ. பிரமிளா, எஸ். லோகவதி, ஆர். செல்வி, ஆனந்தி, நிழல் புஷ்பராஜ், ரத்னா ஆர். சத்யா, பிடிசி வீரா, ஆர்ம்ஸ்டிராங், அறிவழகன், ஆர்.என். சேகர், இ. செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry