மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்திய முதலமைச்சர்! தண்டனைக்குரிய குற்றம் என பார்வைச் சவால் உடையோர் ஆவேசம்!

0
38

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் பிப்ரவரி 25ம் தேதியுடன் நிறைவடைந்தது. அன்றைய தினம், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் குறித்து விமர்சித்தபோது, “கண் தெரியா கபோதின்னுவாங்க அதான்…” என்ற வார்த்தையை பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது.

முதலமைச்சரின் இந்தப் பேச்சு, விழிச்சவால் உடையோர் உட்பட மாற்றுத்திறனாளிகள் பலரையும் வேதனைப்பட வைத்துள்ளது. இதுகுறித்து, அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் முத்துச்செல்வி, “மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச்சட்டத்தில்(2016), மாற்றுத்திறனாளிகளின் குறைபாட்டை இழிவுபடுத்துற வகையிலோ அல்லது காயப்படுத்துகிற மாதிரியோ பொதுவெளியில பேசுவது தண்டனைக்குரிய குற்றம்னு சொல்லப்பட்டிருக்கு. வாய்தவறிதான் முதல்வர் அப்படிச் சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்.

முத்துச்செல்வி, துணைத்தலைவர், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு

ஆனா, பொதுவெளியில பேசுறப்போ யாரா இருந்தாலும் கவனமா பேசுறதுதானே சரியானது? ‘முதலமைச்சரே இப்படிப் பேசினார்’ என்று மற்றவங்களும் சில சந்தர்ப்பங்களில் மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத்துற மாதிரி பேசிடக் கூடாதில்லையா? ஒருத்தர் பேச்சும் செயலும் இன்னொருத்தர் செய்கிற தவற்றுக்கு முன்னுதாரணமாகிவிடக் கூடாதுங்கிறதுதான் எங்களோட எதிர்பார்ப்பு. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தமிழக முதல்வர்தான் கவனிக்கிறார்.

எங்களுக்கொரு பிரச்னை அல்லது கோரிக்கைன்னா அவரைத்தான் அணுகுவோம். எங்களோட உணர்வுகளைப் புரிஞ்சுக்காம அவரே பொதுவெளியில இப்படிப் பேசியது வருத்தமளிக்குது. எங்களோட நியாயமான ஆதங்கத்தைத் முதலமைச்சர் கனிவுடன் புரிஞ்சுப்பார்னு நம்புறோம்” என்றார்.

Thanks : Vikatan Web

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry