Friday, March 24, 2023

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு! LPG விலை உயர்வால் ஆட்டோ கட்டணமும் உயர்கிறது!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் மார்ச் 1ம் தேதியான இன்று வீட்டு உபயோக சிலிண்டர், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1118.50 காசுகள் ஆகும். அதேபோல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.350.50 உயர்ந்துள்ளது. ஆட்டோக்களுக்கான எல்பிஜி விலையும் ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்றே அமலுக்கு வந்துள்ளது.

Also Read : மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்திய முதலமைச்சர்! தண்டனைக்குரிய குற்றம் என பார்வைச் சவால் உடையோர் ஆவேசம்!

ஏற்கெனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளதாக சாமானிய மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், விநியோக ஊழியர்களுக்கான டிப்ஸ்ஸையும் சேர்த்தால் மாத பட்ஜெட்டில் சிலிண்டருக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக இல்லத்தரசிகள் குமுறுகின்றனர். கேஸ் விலை உயர்வால் ஹோட்டல்களின் உணவுப்பண்டங்களின் விலையும், தேநீர் கடைகளில் டீ, காபி விலையும், ஆட்டோ கட்டணமும் உயரும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles