மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது #Airtel! வருவாய் போதவில்லை என குறைபட்டுக்கொள்ளும் சுனில் மிட்டல்!

0
43

டெலிகாம் கட்டணத்தை விரைவில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் அவர் இதனை அறிவித்தார்.

கடந்த டிசம்பரில் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.99-ல் இருந்து ரூ.155 என ஏர்டெல் உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் இதை நடைமுறைக்கு கொண்டு வந்தன. இந்த நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

Also Read : மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்திய முதலமைச்சர்! தண்டனைக்குரிய குற்றம் என பார்வைச் சவால் உடையோர் ஆவேசம்!

கட்டண உயர்வு குறித்து பேசியுள்ள சுனில் மிட்டல், “டெலிகாம் துறை சரந்து பெரிய அளவில் மூலதன முதலீடு மேற்கொண்டுள்ளோம். இருந்தாலும் அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக உள்ளது. தற்போது பயனர்கள் தாங்கள் செலுத்தும் தொகையை விடவும் அதிக அளவுக்கு டேட்டாவை பயன்படுத்தி வருகின்றனர். அதை மாற்ற வேண்டும். அதன் காரணமாக சிறிய அளவில் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அநேகமாக இது நடப்பு ஆண்டின் மத்தியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது” என்றார். இதனால் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்கள் கணிசமாக உயரும். ஏர்டெல்லைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தும்.

Also Read : வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! LPG விலை உயர்வால் ஆட்டோ கட்டணமும் உயர்கிறது!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry