அதானிக்கு சாதகமாக புதிய சட்டத் திருத்தங்கள்! RTI மூலம் அம்பலம்! பெரும் சர்ச்சையில் சிக்கிய மோடி அரசு!

0
384

நிலக்கரி சுரங்கத் தொழிலில் அதானி குழுமத்துக்கு ஆதரவாகவும், சாதகமாகவும், அவர்களது தொழிலை லாபகரமானதாக்கும் வகையிலும் மத்திய பாஜக அரசு சட்டங்களை கொண்டுவந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் (TRC) என்ற என்.ஜி.ஓ. அமைப்பும், அல் ஜசீரா ஊடக நிறுவனமும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மூலம் இதை அம்பலப்படுத்தி உள்ளது.

Source: Modi govt allowed Adani coal deals it knew were ‘inappropriate’

நிலக்கரிச் சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான குறிப்பிட்டதொரு விதிமுறை, பொருத்தமற்றது மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது என்று கூறி பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் சில விதிவிலக்குகளை அளித்துள்ளது.

இதன்படி, இந்தியாவில் அடர்ந்த காடு ஒன்றில் இருக்கும் 450 மில்லியன் டன் நிலக்கரி உள்ள ஒரு தொகுப்பிலிருந்து அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிலக்கரி அகழ்வு செய்ய மோடி அரசு அனுமதி வழங்கியுள்ளது. கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமத்திற்கு ஏன் விதிவிலக்கு அளிக்கப்பட்டது என்பது குறித்து மோடி அரசு விளக்கவில்லை.

Also Read : மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது #Airtel! வருவாய் போதவில்லை என குறைபட்டுக்கொள்ளும் சுனில் மிட்டல்!

பொது நல வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெரும்பாலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் தன்னிச்சையாகவும், சட்ட விரோதமாகவும் இருப்பதாக கூறியது. அத்துடன் 204 நிலக்கரிச் சுரங்கங்களின் ஒதுக்கீட்டை ரத்து செய்து 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மாநில அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கான 101 குத்தகைகளும் இதில் அடங்கும். ஆனாலும், மோடி அரசு அறிமுகப்படுத்திய விதிமுறையின் கீழ் அதானி குழுமத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Thanks – Aljazeera

மோடியின் அரசியல் வளர்ச்சிக்கு இணையாக, வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள அதானி குழுமத்தை, மோடி அரசின் முடிவுகள் நிலக்கரிச் சுரங்க தொழிலை தடையின்றி மேற்கொள்ள உதவியுள்ளது. இதுவரை, அதானி குழுமம் 80 மில்லியன் டன் நிலக்கரியை குறிப்பிட்ட தொகுப்பிலிலிருந்து வெட்டி எடுத்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, நிலக்கரிச் சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, மத்திய, மாநில அரசு நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டன. சுரங்க உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு ரகசிய ஒப்பந்தங்களின் கீழ் அவர்கள் வழங்கினர். இந்த ஒப்பந்தங்கள் மைன் டெவலப்பர் மற்றும் ஆபரேட்டர் (MDO) ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இதைவைத்து 2014 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கூட்டணி அரசை மோடி கடுமையாக விமர்சித்தார். “நிலக்கரி ஊழல் ஒட்டுமொத்த தேசத்தின் முகத்தையும் இருட்டடிப்பு செய்துள்ளது” என்று 2012ல் அவர் ட்வீட் செய்தார். “AICC என்பது இப்போது “அகில இந்திய நிலக்கரி காங்கிரஸ்,” என்றும் அவர் விமர்சித்தார்.

2014 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மோடி அரசு நிலக்கரிச் சுரங்கங்களை “வெளிப்படையாக” மறு ஏலம் விடத் தொடங்கியது. தனியார் நிறுவனங்களைத் தொடர்ந்து அனுமதித்தது. வணிக நிலக்கரி சுரங்கம் தடை செய்யப்பட்டிருந்தபோதே, MDO ஒப்பந்த அடிப்படையில், அதிக லாப வரம்புகளுடன் சுரங்கத் தொழிலை நடத்துவதற்கான கதவை மோடி அரசு திறந்துவிட்டது. காலப்போக்கில், அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி MDO ஆக உருவெடுத்துள்ளது. தற்போது, 2,800 மில்லியன் டன் நிலக்கரியை வைத்திருக்கும் தொகுப்புகளுக்கு ஒன்பது MDO ஒப்பந்தங்களை அந்த நிறுவனம் வைத்துள்ளது.

மாநில அரசுகளின் நிறுவனங்களுக்கான அசல் ஒதுக்கீடுகள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, தனியார் நிறுவனங்களுடன் இந்த நிறுவனங்கள் மேற்கொண்ட MDO ஒப்பந்தங்கள் தானாகவே ரத்தாகிவிட்டன. எனவே, நிலக்கரி சுரங்கங்கள் அதிக விலைக்கு ஏலம் விடப்படுவதையும், இலவசமாக ஒதுக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதாகக் கூறி, மத்திய பாஜக அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்து, ஏற்கனவே உள்ள சுரங்கச் சட்டங்களைத் திருத்தியது.

Also Read : வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு! LPG விலை உயர்வால் ஆட்டோ கட்டணமும் உயர்கிறது!

இது பாதி உண்மை மட்டுமே. அதாவது, விதிமுறைகளில் தன்னிச்சையான ஒரு சாளரத்தை மோடி அரசு திறந்துவிட்டது. எந்தெந்தவற்றை ஏலம் விடுவது, எந்தெந்த மாநிலங்களுக்கு ஒதுக்குவது என்பதை இவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

உச்ச நீதிமன்றம் எதை சட்டவிரோதம் என்று கூறியதோ, அதற்கு மோடி அரசு தனது நாடாளுமன்ற பலத்தை பயன்படுத்தி சட்ட பாதுகாப்பை வழங்கியதுடன், மாநில அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு மீண்டும் விருப்பமான ஒதுக்கீடுகளை செய்ய அதிகாரம் அளித்தது. அதானி குழும நிறுவனங்களை மீண்டும் நிலைநிறுத்த பாஜக ஆளும் மாநில அரசாங்கத்திற்கு இது பயனுள்ளதாக இருந்தது.

இவ்வாறு, அதானி குழுமத்துக்காக மோடி அரசு புதிய விதிமுறைகளை, சட்டத் திருத்தங்களை உருவாக்கி, இருக்கும் சட்டங்களை வளைத்து பல்வேறு வகையிலும் ஆதரவாக இருந்துள்ளது. அதானி குழுமத்திற்கு சாதகமாக திருத்தப்பட்ட நிலக்கரிச் சுரங்கச் சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைக்கு பின்பு அதானி குழுமம் பெரும் சரிவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Aljazeera – வேல்ஸ் மீடியாவில் தமிழில் சுருக்கமாக

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry