3 மாநில தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவு! நாகாலாந்து, திரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சி!

0
91

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற மூன்று வடகிழக்கு மாநிலங்களில், நாகாலாந்து, திரிபுராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைகிறது. மேகாலயாவில் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) அதிக தொகுதிகளில் முன்னேறுகிறது.

திரிபுரா: தற்போதைய நிலவரப்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பாஜக கூட்டணி 34 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. சிபிஎம் – காங்கிரஸ் கூட்டணி 14 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. மாநிலக் கட்சியான ப்ரடோய்ட் மணிக்யா டெப்பர்மாவின் திப்ரா மோதா கட்சி 12 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது.

Also Read : அதானிக்கு சாதகமாக புதிய சட்டத் திருத்தங்கள்! RTI மூலம் அம்பலம்! பெரும் சர்ச்சையில் சிக்கிய மோடி அரசு!

நாகாலாந்து: 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – பாஜக கூட்டணி 36 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. என்பிஎஃப் கட்சி 2 தொகுதியை கைப்பற்றும் நிலையில், காங்கிரஸ் எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை.

Also Read : மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது #Airtel! வருவாய் போதவில்லை என குறைபட்டுக்கொள்ளும் சுனில் மிட்டல்!

மேகாலயா: 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மேகாலயாவில், சங்மாவின் ஆளும் தேசிய மக்கள் கட்சி 25 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. யுடிபி 11 இடங்களை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. இங்கு காங்கிரஸ் மற்றும் திரிணமூல் தலா 5 தொகுதிகளையும், பாஜக 3 தொகுதிகளையும் கைப்பற்றும் நிலையில் உள்ளன. இந்த மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry