பொய் வழக்கு போட்டு போலீஸ் துன்புறுத்துகிறது! கதறும் பழங்குடி மக்கள்!

0
127

திருட்டு வழக்குப் போட்டு போலீசார் துன்புறுத்துவதாக பழங்குடியின மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், புலிவானந்தல் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த ராஜாக்கிளி, அவரது உறவினர் கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் நள்ளிரவில் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், புலிவானந்தல் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இன பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் நேரில் வந்து புகார் அளித்துள்ளனர். அதில், காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளை முடித்து வைக்க, பொய் வழக்கு போட்டு தங்களின் கணவர்களையும், உறவினர்களையும் கைது செய்யும் போலீசாரின் நடவடிக்கையை தடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிக்கு முடி வியாபாரம் செய்து பிழைக்கும் தங்களை, திருட்டு வழக்குகளில் சம்பந்தப்படுத்தி, தங்கள் பகுதி ஆண்களை அழைத்துச் செல்வதை போலீஸார் வழக்கமாகக் கொண்டுள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தாங்கள் வைத்துள்ள அரை சவரன், ஓரு சவரன் தங்க நகைகளைக் கூட போலீஸாப் அடாவடித்தனமாக பறிமுதல் செய்வதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். போலீஸார் அடிக்கடி பொய் வழக்குப்போட்டு தங்கள் வீட்டு ஆண்களை கைது செய்வதால், பழங்குடியின மக்களான தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகளும் மிகவும் சிரமப்படுவதாக பழங்குடியின பெண்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry