திராவிடநாடு கோரிக்கைக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும்! இந்தியன் என்ற உணர்வே இருக்கக்கூடாது! அதிர வைக்கும் டூல்கிட்?

0
37

திராவிடக் கொள்கையை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், மாணவர்கள் மத்தியில் தமிழன், இந்து, இந்தியன் என்ற உணர்வை இல்லாமல் செய்ய வேண்டும் என்பன போன்ற கருத்துகளுடன் ஜாக்டோ ஜியோ பெயரில் டூல்கிட் வைரலாகி வருகிறது. தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்புதான் ஜாக்டோ ஜியோ. இந்தக் கூட்டமைப்பின் பெயரில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் டூல் கிட் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டூல் கிட் என்பது, ஒரு வேலையையோ அல்லது பிரச்சாரத்தையோ மேற்கொள்வதற்கு, அது குறித்த தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமாகும்.

தற்போது வெளியாகியுள்ள டூல் கிட்டின் உண்மைத் தன்மை ஆராயப்பட வேண்டும். ஏனெனில் அதில் இடம்பெற்றுள்ள 20 கருத்துகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. ஜாக்டோ ஜியோ பெயரில் வைரலாகிவரும் அந்த டூல்கிட்டானது, ஜாக்டோ ஜியோ மற்றும் கழக ஆதரவுடன் செயல்படும் பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் ரகசிய இயக்கக் குறிப்புகள் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் சிலவற்றை சுருக்கமாகப் பார்க்கலாம்.

  • திமுக சார்பில் முன்வைக்கப்படும் திராவிட சித்தாந்த கோட்பாடுகளை மக்கள் மத்தியிலும், முக்கியமாக இளைய சமுதாயம், மாணவ மாணவிகளின் மனதில் ஆழமாக பதியவைக்க வேண்டும்.
  • திராவிடம் என்ற கொள்கை, அனைத்திற்கும் அடிப்படை என்ற பரப்புரைகள் மாணவர்களிடம் சென்று சேர வேண்டும்.
  • திராவிட சித்தாந்தத்திற்குப் பிறகுதான் தமிழ் மொழி, தமிழ்மொழியின் கலாச்சார சிந்தனைகள் என்பதை மாணவர்கள் மனதில் பதியவைக்க வேண்டும்.
  • பிராமணர்கள் என்ற உயர் சாதியினரும், மதவெறி பிடித்த இந்துக்களால் புனையப்பட்டது இந்து மதம், இந்து மதவெறியர்களின் சுயநலனுக்காக இது கட்டமைக்கப்பட்டது என்ற பிம்பத்தை மாணவர்களிடம் ஆழமாக பதிய வைக்க வேண்டும்.
  • தான் ஒரு திராவிடன் என்பதை மாணவ மாணவியருக்கு ஆழமாகப் புகுத்திவிட்டால், தமிழன், இந்து, இந்தியன் என்ற உணர்வு அறவே இல்லாமல் செய்துவிடலாம்.
  • எக்காலத்திலும் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் விதமாக மாணவ மாணவியரிடம் பிரச்சாரம் அமைந்துவிடக் கூடாது.
  • கோவில்களுக்குச் செல்வது அபத்தமானது, கல்லால் ஆன இந்து கடவுள் சிலைகளால் எந்த லாபமும் இல்லை என்ற திராவிட இயக்க கடவுள் மறுப்பு கொள்கைகளை இந்து சிறுவர் சிறுமிகள் மனதில் பதியவைக்கவும்.
  • நீட் தேர்வு என்பது ஒன்றிய அரசால், திராவிட மாநிலமான தமிழ்நாடு மாணவ மாணவியினரை வஞ்சிப்பது, என மாணவ மாணவியினரிடம் மனதில் பதியவையுங்கள்.
  • டெல்லி ஒன்றிய அரசு மேல் ஒருவிதமான வெறுப்பை மாணவ மாணவியரிடம் தூண்டவும். திராவிட மாநிலமான தமிழ்நாடு மாநிலத்திலிருந்து செல்லும் வரியில், ரூ.5,000 கோடியில், மோடி தனக்கு டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பங்களாவை சொந்த உபயோகத்திற்காக கட்டி வருகிறார் என மாணவ மாணவியர் மனதில் பதிய வைக்கவும்.
  • திராவிடர்கள் ஒன்று சேரும் பட்சத்தில், நம் தமிழ்நாடு, டெல்லி ஒன்றிய அரசிலிருந்து விடுபட்டு, திராவிட நாடு என்பதை தனி நாடாக்கலாம். அதற்கு இளைஞர்களின், மாணவ மாணவிகளின் ஒற்றுமை, உறுதி ஆதரவு மிகவும் முக்கியம் என்பதை மாணவர்கள் மனதில் பதிய வைக்கவும்.
  • திராவிட நாடு ஆதரவு ஊடகங்களான சன் டிவி மற்றும் செய்தித் தொலைக்காட்சி, கலைஞர் டிவி மற்றும் செய்தித் தொலைக்காட்சி, நியூஸ் 7 செய்தித் தொலைக்காட்சி, பாலிமர் செய்தித் தொலைக்காட்சி, புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சி, தினத்தந்தி செய்தித் தொலைக்காட்சி மற்றும் நக்கீரன், விகடன் போன்ற ஊடக செய்திகளை மாணவ மாணவியரிடம் சொல்லி பார்க்க சொல்லுங்கள்.

பள்ளி, கல்லூரி மாணவர்களை மூளைச் சலவை செய்து, மனதில் விஷத்தை விதைக்கும் தேசத்துக்கு விரோதமான இந்த கருத்துகள்தான், ஜாக்டோ ஜியோ பெயரில் வைரலாகிவரும் அந்த டூல்கிட்டல் இடம்பெற்றுள்ளன. இதுபற்றி ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகரஜானிடம் கேட்டபோது, “இது தவறான தகவல், திமுக எப்படி இந்த மாதிரியான பிரச்சாரத்தை செய்யும்? பிரச்சனையை தூண்டும் வகையில் யாரோ இதை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இது, ஜாக்டோ ஜியோ மட்டுமல்ல, தமிழக அரசுக்கே களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த டூல்கிட் விவகாரம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்

இதுபற்றி சென்னை மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளருமான சத்யநாதனிடம் பேசியபோது, “கோரிக்கைகள் அடிப்படையில் பல சங்கங்கள் இணைந்த கூட்டமைப்புதான் ஜாக்டோ ஜியோ. இந்த டூல்கிட்டில் இருப்பது போல ஜாக்டோ ஜியோ எந்த பரிந்துரையையும் செய்யவில்லை. ஜாக்டோ ஜியோ பெயரில் போலியான டூல்கிட்தான் இது. கோரிக்கைகள் அடிப்படையில் கட்சிக்கு சங்கங்கள் ஆதரவு தெரிவிப்பது உண்டு. இதில் உள்ளது போல எந்தக் கட்சியும் பரிந்துரைக்காது, எந்த கட்சியின் அஜெண்டாவையும் ஜாக்டோ ஜியோ மறைமுகமாகக் கூட செயல்படுத்தாதுஎன்று கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry