கோயில்களின் ஆகம, சாஸ்திர விவகாரங்களில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது! அர்ஜுன் சம்பத் கண்டனம்!

0
28

ஆகமம், சாஸ்திர, சம்பிரதாயங்களில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியிருக்கிறார். நிர்வாகம் சார்ந்த பணிகளை மட்டுமே அறிநிலையத்துறை கவனிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘IBC தமிழ்நாடு’ வலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், “மதம் மற்றும் ஆன்மிக விவகாரங்களில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுகிறது. வழிபாடு, பூஜை, விழாக்கள், தேரோட்டம் உள்ளிட்டவை ஆகமம், சம்பிரதாயம் மற்றும் சாஸ்திரங்கள் சம்பந்தப்பட்டது.  இவை அறநிலையத்துறை சட்டங்களின் கீழ் வராது. வருவாய், மராமத்துப் பணிகள், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது, கோவில் சொத்துகளை பாதுகாப்பது போன்ற நிர்வாகம் சார்ந்த பணிகளை மட்டுமே அறிநிலையத்துறை செய்ய வேண்டும்என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

இந்தப் பேட்டியில் நெறியாளர் பா. அருண்ராஜ் கவனம் ஈர்க்கிறார். நெறியாளர் என்றாலே, விருந்தினரை பேசவிடமால் இடைமறித்து, கேள்விக்கான பதிலை முழுமையாக சொல்லவிடாமல் தடுப்பது என்றாகவிட்டது. பெரு ஊடகங்களில் உள்ள பிரபல நெறியாளர்கள் இந்த வழிமுறையை கையாளுவதால் இதுதான் சரி என மக்கள் நினைக்கின்றனர். ஆனால், கேள்விக்கான பதில் கிடைக்கும்வரை நிதானமாக இருத்தல், மற்ற சமய வழிபாட்டுத்தலங்களை விமர்சிக்கும்போது எதிர்ப்பை பதிவு செய்தல் போன்றவை வரவேற்கப்பட வேண்டியது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry