தமிழகத்தில் சொத்துவரி மீண்டும் 6% உயர்கிறது! ஏற்கெனவே பலமடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!

0
137

தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படாமல் இருந்தது. இதனைத்தொடந்து தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் கட்டிடத்தின் வகை, பரப்பளவுக்கு ஏற்ப 25% முதல், 150% வரை சொத்து வரியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

மட்டுமின்றி, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று 15-வது நிதி ஆணையம் நிபந்தனை விதித்துள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத் துறை இதற்கு விளக்கம் கூறியது. ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என அப்போதே அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் படி ஏப்ரல் முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 6 சதவீதம் அளவுக்கு சொத்துவரி உயர்த்தப்படவுள்ளது.

Also Read : கரோனா புதிய திரிபு வீரியம் குறைவானது! கிளஸ்டர் பாதிப்பு இல்லை என அமைச்சர் தகவல்!

கடந்த ஆண்டு 25, 50, 75 மற்றும் 100 என்ற சதவீதப்படி சொத்து வரி உயர்த்தப்பட்டது. காலிமனை வரி மட்டும் 100 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் 6% சொத்துவரியை உயர்த்துவது மக்கள் மத்தியில் அதிருப்தியை, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சொத்து வரி உயர்வுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்ற ஆண்டு வீட்டுவரி பன்மடங்கு உயர்த்தப்பட்டது. அதனைதொடர்ந்து மின் கட்டணம் உயர்ந்தது. தற்போது இந்த ஆண்டும் அதை செயல்படுத்தும் போது வாடகைக்கு குடியிருப்போர் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு யோசித்ததாக தெரியவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Also Read : இண்டேன் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்! ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தின் அலட்சியப்போக்கு? Vels Exclusive

சகட்டு மேனிக்கு ஆண்டுதோறும் உயர்வு என்றால் ஒரு கட்டத்தில் முடியாத அளவில் இந்த வீட்டுவரி உயர்வு இருக்கும். தற்போது சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் இந்த 6 சதவீத உயர்வை எதிர்க்க வேண்டும். முதல்வரிடம் எடுத்துச் சொல்லி இந்த வரி உயர்வை கைவிடச் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, சொத்துவரி உயர்வு மட்டுமின்றி, சென்னையில் குடிநீர் மற்றும் கழிவு நீர் கட்டணமும் இம்மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பத்திரப்பதிவு கட்டணத்தை 2% குறைப்பதாகக் கூறிவிட்டு, நிலத்தின் வழிகாட்டி மதிப்பை தமிழக அரசு 33% உயர்த்தியுள்ளது. ஆனால், வழிகாட்டி மதிப்பு 33% உயர்த்தப்படும் என்கிற அறிவிப்புக்கு மாறாக பல இடங்களில் 50% வரை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்து, ரியல் எஸ்டேட் துறையில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry