உக்ரைன் மாணவர்களுக்கு தமிழகத்தில் சீட்! தமிழகத்தில் புதுவகை கொரோனா தொற்று! அமைச்சர் மா.சு. விளக்கம்!

0
294

சென்னையில் கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா அதிகரித்த காரணத்தினால், இந்த மருத்துவமனை 800 படுக்கை கொண்ட சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மீண்டும் அந்த மருத்துவமனையை தேசிய முதியோர் நல மருத்துவமனையாக மாற்றலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு மேற்கொண்டதில், உடனடியாக இந்த கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது அதனை சரிசெய்து விரைவில் அங்கு முதியோர் நல மருத்துவமனை செயல்பட்டுக்கு வரும். இந்த கட்டிடத்தில் முறைகேட்டில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

யாருக்காவது ஒருவருக்கு அல்லது அவர்களை சார்ந்தவர்களுக்கோ கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அதை மரபியல் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்கிறோம். அது போன்று ஆய்வு செய்ததில் சென்னையை அடுத்த நாவலூரில் ஒருவருக்கு ஒமிக்ரான் பிஏ-4 வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் BA 4 வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர் நலமுடன் உள்ளார். தாயாருக்கும், அவரது மகளுக்கும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகி இருந்தது. தாய்க்கும் மகளுக்கும் நடைபெற்ற பரிசோதனையில் உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்று பாதிப்பு உறுதியானது.

தாயாருக்கு ஒமிக்ரான் BA 2, மகளுக்கு ஓமிக்ரான் BA 4 தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. BA 4  வகை கண்டறியப்பட்ட நபர் குணமடைந்துவிட்டார். அவருடன் தொடர்பில் இருந்த யாருக்கும் தொற்று இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா, ஓமிக்ரான் உள்ளிட்ட 4 வகையான பெருந்தொற்று பாதிப்பு மட்டுமே உள்ளது. புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை. ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட BA 4 கொரோனா தமிழகத்திலும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மற்ற மாநிலங்களில் ஓமிக்ரான் BA 4 வகை பரவி இருக்கிறதா என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தும்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்டவரைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் முழுமையாகக் குணமடைந்து விட்டார்கள். தமிழகத்தில் ஐம்பதுக்கும் குறைவான அளவில்தான் கொரோனா பாதிப்படைந்தவர்கள் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஜூன் 12ம் தேதி மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Medical students returned from Ukraine – GETTY IMAGE

1000 மருத்துவ பணி இடங்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட உள்ளது. இதற்கான கலந்தாய்வு வரும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது, வெள்ளிக்கிழமை பணி மாறுதல் செய்யப்படவுள்ளது. முதல் முறையாக ஒரே நேரத்தில் ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கு கலந்தாய்வு மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை. உக்ரைனில் மருத்துவம் படிக்ககும் மாணவர்களுக்கு இங்கு சீட் வழங்குவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது, மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry