இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியா டுடே இதழ் ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது அடுத்த மாதம் 5-ந் தேதி வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தேர்வான மாநிலங்களின் பட்டியலை அந்த இதழ் வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
நீர்மேலாண்மை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை இந்தியா டுடே இதழ் நிர்வாகம் சார்பில், முதலமைச்சர் பழனிசாமிக்கு கடிதமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிப்பதாக முதலமைச்சர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளக்கக்கூடிய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை முதலிடமாக தேர்ந்தெடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.@IndiaToday இதழ் நிர்வாகத்திற்கு தமிழக அரசு சார்பில், எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 27, 2020
இந்த பட்டியலில், இமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தையும், பஞ்சாப் மூன்றாவது இடத்தையும், கேரளா 4வது இடத்தையும், குஜராத் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry