புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க கட்டுப்பாடு! மக்களே தடுக்க சட்டத்திருத்தம்! தமிழக அரசு அரசாணை!

0
111

டாஸ்மாக்(TASMAC) கடைகள் தங்கள் பகுதியில் அமைக்க வேண்டாம் என்றால், மக்களே அதைத் தடுக்கும் வகையிலான சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு பதிலாக கூடுதலாக கடைகளை அரசு திறந்து வருவதாக புகார் கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்துகின்றனர்.

Also Read: 6 மாதத்துக்குள் பார்களை மூட வேண்டும்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் பார் உரிமையாளர்கள்!

இந்நிலையில் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை முழுமையாகப் பரிசீலித்து அதன் அடிப்படையிலேயே டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கக்கூடிய வகையில், சட்டவிதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்திருக்கிறது.

மக்கள் தெரிவிக்கும் ஆட்சேபங்களை பரிசீலிக்காமல் டாஸ்மாக் மதுக் கடைகளை திறக்க அனுமதிக்ககூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் மாவட்ட ஆட்சியர்கள் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மது விலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது. இதன்படி, டாஸ்மாக் கடைகள் திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கே மதுக்கடையை திறக்கக்கூடாது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry