விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் 20 கோடி ருபாய் செலவில் எடுக்கப்பட்டது. ஆனால் படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டிள்ளது. தற்போதைய தகவலின்படி, மகாராஜா திரைப்படம் உலகளவில் மொத்தமாக 102.27 கோடி வசூலித்துள்ளது. தமிழக திரைப்பட தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 ஜூன் 14ல் உலகமெங்கும் வெளியானது.
எந்த ஒரு பெரிய ஆரவாரமும் இன்றி, பெரிய பிரம்மாண்ட பிரமோஷன்கள் இன்றி, 2024 ஆம் ஆண்டுக்கான பிளாக்பஸ்டர் திரைப்படமாக விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படம் உருவெடுத்துள்ளது. விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், முனீஸ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் அதிரடி – திரில்லர் திரைப்படமான மகாராஜாவை, தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ‘குரங்கு பொம்மை’ திரைப்படத்தினை இயக்கி மக்களின் மனதை வென்ற நித்திலன் சுவாமிநாதன், 7 வருடங்களுக்கு பிறகு தனது இரண்டாவது படைப்பை படைத்துள்ளார்.
எந்த ஒரு பெரிய ஆரவாரமும் இன்றி ஜூன் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம், திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மனைவியின் உயிழப்புக்கு பிறகு மகளுடன் வாழ்ந்து வரும் விஜய் சேதுபதி, படத்தில் முடிதிருத்தும் தொழில் செய்து வரும் விஜய் சேதுபதி, சொந்தமாக பார்பர் கடை ஒன்றையும் வைத்துள்ளார்.
திடீரென வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவம் ஒன்று நடக்க, இறுதியில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்றை வைத்து ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் விஜய் சேதுபதியின் எதார்த்தனமான உணர்ச்சிகரமிக்க நடிப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது, மேலும் படத்தின் வில்லனாக அனுராக் காஷ்யப்பின் மிரட்டும் நடிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.
Also Read : சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? இதோ உங்களுக்கான பதில்! Vels Exclusive
படத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாதபடி திரைக்கதையை சுவாரசியமாக நகர்த்தியிருப்பார் இயக்குனர் நித்திலன் சாமிநாதன். படத்தை உருவாக்க போட்ட காசைவிட 5 மடங்கு பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடித்தியுள்ளது மகாராஜா திரைப்படம். விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் 20 கோடி ருபாய் செலவில் எடுக்கப்பட்டது. ஆனால் படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. தற்போதைய தகவலின்படி, மகாராஜா திரைப்படம் உலகளவில் மொத்தமாக 102.27 கோடி வசூலித்துள்ளது.
மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஜா படத்தின் ஓடிடி உரிமையை ‘Netflix’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தினை 2024 ஜூலை 12ல் ஸ்ட்ரீமிங் செய்ய நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளது. திரையரங்கில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து, தற்போது மகாராஜா படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் உள்ளன. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் மகாராஜா வெளியாகவுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry