நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி தம்பி! This could be something big! தெறிக்கவிடும் வலிமை கிளிம்ப்ஸ்!

0
47

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ’வலிமை’ திரைப்படத்தின் முன்னோட்டம் அதாவது கிளிம்ப்ஸ் வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

விரைவில் டீசரும் படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ள நிலையில், ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் இன்று மாலை வெளியானது. அதில், ”நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள். சாத்தானின் அடிமைகள் நாங்கள். இருள் மலைதான் எங்கள் உலகு. அதில் அத்துமீறி எவனாவது கால் வைத்தால்” என்று வில்லன் கார்த்திகேயா குரல் ஒலிக்க, தீப்பொறியுடன் அஜித் கால் பதிக்க, யுவன் இசை தெறிக்க விடுகிறது .

’அர்ஜுன் நீ என் ஈகோவைத் தொட்டுட்ட’ என்று கார்த்திகேயா சொல்ல, ‘நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி தம்பி’ என்று அஜித் பதிலடி கொடுக்கிறார். பின்னணியில் அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் வானத்திலும்… பில்டிங்குக்கு பில்டிங் பைக்கிலேயே பறக்கும் காட்சிகளும் கவனம் ஈர்க்கின்றன. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும், இந்த படம் அஜித்துக்கு முற்றிலும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படத்தில் வரும் காட்சியைப் போல, ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டத்திற்கு அஜித் பைக்கில் தாவும் காட்சியை பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது என ரசிகர்கள் சிலாகிக்கின்றனர்.

’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின், முதல் பாடல் ‘நாங்க வேற மாரி’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry