‘Beast’ஆக மாறிய விஜய்! துப்பாக்கியுடன் டெரர் போஸ்! விஜய் பிறந்தநாளையொட்டி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

0
39

’விஜய் 65’ படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய் பிறந்தநாளையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’விஜய் 65’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, பூவையார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நாளை (ஜூன் 22 ஆம் தேதி) விஜய்யின் 47-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு துப்பாக்கியுடன், விஜய் ஃபிட்டான உடல்வாகுவுடன் இருக்கும் புகைப்படத்துடன், படத்தின் தலைப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஜார்ஜியாவில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் துவங்கியது. ‘தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்குக்காக நாங்களும் பீஸ்ட் மோடில் காத்திருந்தோம்’ என்று கருத்திட்டு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பிறந்தாளும் இன்றுதான். இருவரின் பிறந்தநாளையும் தயாரிப்பு நிறுவனம் சிறப்பித்துள்ளது.

பீஸ்ட் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அசுரத்தனமான பெரிய மிருகம் என்பதுதான் நேரடி பொருள். அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர். இதற்கு முன்னர் லவ் டுடே, ஒன்ஸ்மோர், பிரண்ட்ஸ், யூத், மாஸ்டர் என ஐந்து நேரடி ஆங்கில தலைப்புகளில் விஜய் நடித்துள்ளார். விஜய்-65 படத்தின் டைட்டில் வெளியானதையொட்டி ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry