புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தும் அதிகாரிகள்! தனியார் பள்ளிகளை மட்டும் அரவணைக்கிறதா கல்வித்துறை?

0
694

இது தொடர்பாக தமிழக ஆசிரியர கூட்டணி மூத்த தலைவரும், ஐபெட்ட தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எண்ணும் எழுத்தும் பயிலும் 1,2,3 வகுப்புகளுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரையில் செயலி வழியாக வளரறி மதிப்பீடு தேர்வு நடைபெற்று வருகிறது.

அந்த தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களுக்கு பத்து கேள்விகள் கேட்கப்படுகின்றது. மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல், இரண்டு பாடங்களுக்கான தேர்வு வினாத்தாளும் அதற்குள்ளேயே உள்ளடக்கி வருகிறதாம். தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டு உள்ள புத்தகத்தை முழுவதுமாக அப்புறப்படுத்தி விட்டார்கள்.

Also Watch : கடலுக்குள் மூழ்கப்போகும் நிலப்பகுதிகள்! Climate change threatens Chennai.

1,2,3 வகுப்புகளில் 35…, 40… வரை உள்ள மாணவர்களை வைத்து ஓர் ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்துகிறார். அவரும் இந்த செயலி வழியாகத்தான் தேர்வு நடத்தவேண்டும். முதலில் தமிழ் பாடத்துக்கான தேர்வினை நடத்துகிறார். பிறகு ஆங்கில பாடத்திற்கான தேர்வினை நடத்துகிறார். பிறகு கணித பாடத்திற்கான தேர்வினை நடத்துகிறார். பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு மறுபடியும் அதே போல செயலி மூலம் தேர்வு நடத்தி வருகிறார்.

இந்த திட்டத்தில் மாணவர்கள் எழுதுவதற்கும், படிப்பதற்கும் வாய்ப்பில்லாமல் போகிறது. இந்த மாணவர்கள் நான்காம் வகுப்பு வருகின்ற பொழுது எப்படி புத்தக பயிற்சியில்லாமல் எழுதவும், படிக்கவும் செய்வார்கள்? இவர்களுக்கு செயல்பாடுகள் வழியாகவே பாடங்கள் நடத்துவதும், செயலி வழியாகவே தேர்வுகள் நடத்துகின்ற போது எழுத்துப் பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போகிறது என்று பெற்றோர் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

Also Watch : Jacto Geo மாநாடு நடத்த முக்கிய காரணமே இதுதான்! நம்பிக்கை இழக்க வைத்துவிட்டது! ஐபெட்டோ அண்ணாமலை.

இதனால் அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் மனநிலை பெற்றோருக்கு இருக்கவே இருக்காது. எப்பாடுபட்டாவது சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை சேர்ப்பதற்கு முனைப்பு காட்டுகின்ற சூழ்நிலையை இந்த தேர்வு முறை ஏற்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் நடத்தி வரும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மறைமுகமான ஒப்புதல் அளித்து வருகிறார்கள் என்ற ஐயம் எழத்தானே செய்கிறது.

சுயநிதி பள்ளிகளிலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் படித்துக்கொண்டிருந்த எங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் கொண்டு வந்து சேர்த்தோமே? பாடப் புத்தகத்தின் வழியாக பாடத்தினை நடத்தாமல், எழுத்துப் பயிற்சி இல்லாமல் PRE KG, LKG, UKG வகுப்பு பாடத்தினை மூன்றாம் வகுப்பு வரை நடத்தினால் எங்களின் பிள்ளைகள் கல்வி எதிர்காலம் என்னாவது? என்று பள்ளி மேலாண்மை குழுவில் உள்ள தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் பெற்றோர் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

Also Read : அடுத்த மாதம் முதல் வாரம் பொதுச்செயலாளர் தேர்தல்! போட்டியின்றி தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி!

எண்ணும் எழுத்தும் செயலியில் மாணவர்களுக்கான அந்த மதிப்பீடுகளின் கேள்வித் தரத்தினை ஒப்பிட்டுப் பார்க்கிற பொழுது, ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கக்கூடிய PreKG மாணவர்களின் தேர்வுத் தரமும், இரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு LKG வகுப்புகள் தேர்வுத் தரமும் மூன்றாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு UKG வகுப்புத் தேர்வு தரமாகத்தான் இந்த கேள்விகள் அமைந்துள்ளன.

அடுத்து 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு பொதுத் தேர்வு நடைபெறும். மாநில அளவில் SCERTயில் இருந்து ஒரே மாதிரியாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டு குறுந்தகடு வழியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ளார்கள். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வினாத்தாள்களை அவர்களுக்கு வேண்டிய அச்சகத்தில் அச்சடித்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு முதல்நாள் அனுப்பி வைப்பார்கள்.

Also Read : எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது தெரியுமா? பிளாஸ்டிக் பயன்பாடும், வகைகளும்!

வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் இருந்து பள்ளி தலைமையாசிரியர்கள் வினாத்தாள் கட்டணமாக 10 ரூபாய், 15 ரூபாய் ஒவ்வொரு மாணவனுக்கும் வினாத்தாளுக்குரிய கட்டணத்தை உரிய முறையில் வசூல் செய்து அவர்களிடம் கொடுத்துவிட்டு, தேர்வு நடைபெறும் காலை 8.00 மணிக்கு 60 கிலோ மீட்டர் தூரமாக இருந்தாலும் பயணம் செய்து வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சென்று வினாத்தாள்களை பெற்று வர வேண்டும்.

அதற்கு பிறகு பள்ளிக்கு எடுத்து வந்து ஆசிரியர் குழு முன்னிலையில் அந்த வினாக்கட்டுகளைப் பிரித்து மாணவர்களுக்கு வழங்கி தேர்வு வைக்க வேண்டும். தேர்வு முடிந்தவுடன் அந்த வினாத்தாள்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அடுத்தடுத்த ஐந்து தேர்வுகளுக்கும் வட்டாரக் கல்வி அலுவலகம் சென்று வினாத்தாட்களை பெற்று வர வேண்டுமாம்.

Also Read : TET தேர்வு சரி; NEET தேர்வு தவறா? டெட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்குமா? வேல்ஸ் பார்வை!

புதிய கல்விக் கொள்கையில் கூட ஆண்டுக்கு ஒருமுறைதான் பொதுத்தேர்வு நடத்துகிறார்கள். இந்த மாதிரி கெடுபிடிகள் எல்லாம் இல்லை. TRB, UPSC, TNPSC GROUP-1, NEET தேர்வுகளை எல்லாம் விஞ்சிய வகையில், தொடக்கப் பள்ளி வகுப்புகளுக்கு பொதுத்தேர்வினை SCERT மூலமாக நடத்துகிறார்கள்.

120 பிள்ளைகளுக்கு 1முதல் 5 வகுப்பு வரை ஒரே ஒரு ஆசிரியர்தான் பல இடங்களில் பாடம் நடத்திவருகிறார். தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள் நினைவிடங்களாக காட்சி அளித்து வருகின்றன. 80% பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே தமிழ்நாட்டில் இயங்கி வரும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது. அதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காமல் செயல்படுவது, SCERT யா? இல்லை தேர்வு நடத்தும் TNPSC துறையா? பள்ளிக் கல்வி ஆணையர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? புதிய கல்விக் கொள்கையினை அமல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறாரா?

Also Read : உங்களை நம்பி கருணாநிதி கட்சியை ஒப்படைத்தாரா? மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இலவச கட்டாய கல்வி, சீருடை, புத்தகம், நோட்டுகள், மதிய உணவு, புத்தகப் பைகள், காலணிகள், மிதிவண்டிகள், லேப்டாப் இவையெல்லாம் கொடுக்கின்ற அரசு இந்த வினாத்தாள்களை தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முன் வரக்கூடாதா?.. மாணவர்களுக்கு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை மனம் குளிர வரவேற்று மகிழும் பெற்றோர், வினாத்தாட்களுக்கு 15 ரூபாய் கொடுக்கும் போது இரண்டையும் சிந்தித்து பார்க்க மாட்டார்களா?

இந்த ஆண்டு கொரானா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் படிக்காமலேயே அடுத்த வகுப்புகளில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் இந்த மாணவர்களுக்கு இவ்வளவு கெடுபிடிகளுடன் தேர்வு நடத்தி என்ன செய்யப் போகிறார்கள்?

Also Read : மக்களவை சபாநாயகரிடம் பெண் எம்.பி.க்கள் புகார்! ஆ. ராசாவின் தற்காலிக சபாநாயகர் பொறுப்புக்கு சிக்கல்!

அடுத்து 6, 7, 8 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு மாதிரியாக வினாத்தாளினுடைய விலையினை பதிவிட்டு வருகிறார்கள். அண்மைக் காலமாக ஆசிரியர்களே வினாத்தாட்களை தயாரித்து தேர்வு நடத்தி வந்தனர். அதேபோல் நீண்ட காலமாக தனியார் நிறுவங்கள் மூலம் வினாத்தாள்களை பெற்று வந்து மாணவர்களுக்கு தேர்வினை நடத்தி வந்தார்கள்.

தரமான தாளில் அச்சடித்து 7, 8 ரூபாய்களில் விடைக்குறிப்புடன், கொடுத்து வந்தார்கள். அவர்களிடம் வினாத்தாள்களைப் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று இந்த அரசு நினைத்திருந்தால், மாணவர்களுக்கு இலவசமாக வினாத்தாள்களை வழங்கி இருக்க வேண்டும். அதுதான் திராவிட மாடல் கல்விக் கொள்கையின் சிறப்பம்சமாக அமைந்திருக்கும்.
இனிவரும் காலங்களில் தொடக்கக் கல்விக்கு பொதுத்தேர்வு என்ற நடைமுறை மாநில அளவில் வினாத்தாள் தயாரித்து, அந்த வினாத்தாள்களில் பெற்று வழங்குவதில் கெடுபிடி, நடத்துவதில் கெடுபிடி என அனைத்து நடைமுறைகளும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

Also Watch : சவுக்கு சங்கரை இயக்கும் மர்ம கும்பல்..! அம்பலப்படுத்தும் மூத்த பத்திரிகையாளர்.

அவ்வாறு தடுத்து நிறுத்த முடியாத சூழல் ஏற்படுமாயின் கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்களை இணைத்து தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டு வரும் நவீன குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து மக்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்க்கும் முனைப்பு இயக்கத்தினை நடத்துவோம். எண்ணும் எழுத்தும் கல்வி முறையினையினைப் போன்று இல்லாமல், முற்றிலும் பாட புத்தகத்தை கொண்டு கற்பித்தல் பணியாற்றுவதற்கு ஆசிரியர்களை அனுமதியுங்கள்.

புள்ளி விபரங்களில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து முழுநேரம் ஆசிரியர்களை கற்றல் கற்பித்தலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு அளியுங்கள். புத்தகங்கள் இல்லாமல் எண்ணும் எழுத்தும் முறையுமே நீடித்தால் கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாடு, கல்விச் சீரழிவு நாளினை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்போம் என்பதை உணர வேண்டிய சுயபரிசோதனைக்கு நம்மை ஆட்படுத்தி கொள்வோம்.

Also Watch : Eco Friendly-யா இருக்கும் சணல் கைவினை பொருள்கள் | நவராத்திரி கிஃப்ட்ஸ் | “JUTE FIAR”

மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்கு ஒரு குழு அமைத்ததைப் போல, தேர்வினை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு ஒரு ஆய்வுக் குழுவினை முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர்-1 ஆகியோர் அமைத்திட வேண்டுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும், ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சார்பிலும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry