புதிய கல்விக்கொள்கை! ஸ்டாலினுக்கு சாமானியனின் அடுக்கடுக்கான கேள்விகள்!(Part-1)

0
8

புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு நிகராக, ஏழை வீட்டு பிள்ளைகள் கல்வி பெறக்கூடாதா என சாமானியர்கள் கேட்கின்றனர். அவர்களில் ஒருவர் எழுதியுள்ள கடிதம்தான் இது.  திமுக தலைவர் மு.. ஸ்டாலின் அவர்களே, வணக்கம்.

எங்களது பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும், என்ன படிக்கக்கூடாது என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம். கல்வியில் அரசியல் செய்து எங்கள் தலைமுறை வரை பாழாக்கியது போதும், எங்கள் பிள்ளைகள், பேரன்களாவது தரமான கல்வியை பெறட்டும். எனக்கு தெரிஞ்ச சில கேள்விகளை கேட்கிறேன், நான் சொல்றது தப்புன்னா, திருத்திக்கிறேன்.

1. மும்மொழிக் கொள்கை தமிழின் மாண்பைக் குறைக்கிறது, தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கிறது என்கிறீர்கள். அப்படியானால், உங்கள் மகள் செந்தாமரை சபரீசன் நடத்தும் பள்ளி, தமிழின் மாண்பை குறைக்கிறதா, உங்கள் குடும்பத்தால் தமிழர்களின் உணர்வுகள் அவமதிக்கப்படுகிறதா? உங்கள் தந்தை கொண்டுவந்த சமச்சீர் பாடத்திட்டம் அந்தப் பள்ளியில் ஏற்கப்படவில்லையே? உங்கள் மகளின் சன் ஷைன் பள்ளியில் ஏன் சி.பி.எஸ்.. பாடத்திட்டம் திட்டம் நடத்தப்படுகிறது?

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை ஹிந்தி.(நீங்கள் எதிர்க்கிறீர்களே அந்த மும்மொழிக் கொள்கைதான்) 9,10-ம் வகுப்புகளில் விரும்பினால் பிரெஞ்ச் எடுத்துக்கொள்ளலாம். மும்மொழிக் கொள்கை உடைய சிபிஎஸ்இ பாடத்திட்டம் கூடாது, நமது பள்ளியில் சமச்சீர் பாடத்திட்டம்தான் போதிக்க வேண்டும் என உங்கள் மகளிடம் நீங்கள் சொல்லவில்லையா? அல்லது நீங்கள் சொல்லி அவர் கேட்கவில்லையா?

2. உங்கள் குடும்பத்தினர், உங்கள் உறவினர் குடும்பத்தினர் அனைவரும் மும்மொழிக் கொள்கை கொண்ட பள்ளிகளில் பயின்றுள்ளார்கள். அனைவருக்கு பல்மொழி வித்தகர்கள். உங்களது கட்சியின் மிக முக்கிய மூத்த நிர்வாகிகளான, மறைந்த க.அன்பழகன் குடும்பம், ஆற்காடு வீராசாமி குடும்பம், துரை முருகன் குடும்பம், .. வேலு குடும்பம், கு. பிச்சாண்டி குடும்பம், ராணிப்பேட்டை காந்தி குடும்பம் உள்ளிட்ட பலர் மும்மொழிக் கொள்கை கொண்ட சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை போதிக்கும் பள்ளிகளை நடத்துவது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?

உங்கள் மகள் தொடங்கி, உங்கள் கட்சி நிர்வாகிகள் வரை சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்துவது சரி, பெரும் பணம் கட்டி அந்த பள்ளிகளில் மாணவர்கள் படிப்பது சரி. அப்போது தமிழின் மாண்பு குறையாது, உணர்வுகள் அவமதிக்கப்படாது. ஆனால், உண்மையான சமச்சீர் கல்வியை கொண்டுவந்து, அதை எங்களைப்போன்ற ஏழை வீட்டு மாணவர்கள் படிக்க வகை செய்தால், தமிழின் மாண்பு கெட்டுவிடும், உணர்வுகள் அவமதிக்கபப்படும்! எங்களுடைய பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை தடுக்கும் உங்களை நினைத்தால் வயிறுதான் எறிகிறது

3. உங்கள் குடும்பம் ஹிந்தி போதிப்பதால், தற்போது அதை வசதியாக மறந்துவிட்டு சமஸ்கிருதம் பக்கம் மக்களை திசை திருப்புகிறீர்கள். சமஸ்கிருதம் உள்ளிட்ட மும்மொழிக்கொள்கை ஏற்புடையதல்ல, மாணவர்களுக்கு பெற்றோருக்கு கல்விச்சுமை அதிகரித்தும் என்கிறீர்கள். எங்கள் குழந்தைகள் ஹிந்தி படிக்க வேண்டுமா? சமஸ்கிருதம் படிக்க வேண்டுமா? மலையாளம், கன்னடம் படிக்க வேண்டுமா? என்பதை நாங்கள் தீர்மானித்துக்கொள்கிறோம். அதை முடிவு செய்ய நீங்கள் யார்? கேட்டால் அண்ணாவே சொல்லிவிட்டார் என்கிறீர்கள். எதற்கெடுத்தாலும், பெரியாரையும், அண்ணாவையும் துணைக்கு அழைக்காதீர்கள், அவர்கள் காலம் வேறு. நியாயத்தை நீங்கள் சொன்னாலும் நாங்கள் ஏற்கவே செய்வோம்.

4. 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறீர்கள். அந்த கல்விக்கொள்கையில், 5,8 பொதுத்தேர்வில் மாணவர்களை ஃபெயில் ஆக்குவோம் என கூறியுள்ளார்களா? ஃபெயில் ஆனால்தான் உளவியல் பாதிப்பு ஏற்படும், எங்கள் பிள்ளை எந்த அளவுக்கு படிக்கிறான் என்பதை அறிய அரசுக்கு, பள்ளிக்கு, எங்களுக்கு உரிமை உள்ளது. எனவே அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

5. தொழிற்கல்வியை ஆரம்ப வகுப்புகளில் புகுத்துவது, குலக்கல்வி திட்டத்துக்கு ஒப்பானது என்கிறீர்கள். கைத்தொழில் கற்றுக்கொள்வது தவறு என சொல்ல வருகிறீர்களா? இப்போதே பள்ளிகளில் Vocational Group உள்ளதே, அதை ஏன் உங்கள் ஆட்சியில் ரத்து செய்யவில்லை. ஆச்சாரி மகன் மர வேலையோ, நகை வேலையோ கற்கவேண்டும், பிராமணனின் மகன் வேதம் கற்க வேண்டும், செட்டியார் மகன் வியாபாரம் கற்க வேண்டும் என புதிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளதா?  பட்டியலின மாணவர்கள் குறிப்பிட்ட தொழிற்கல்வியைத்தான் கற்க வேண்டும் என அதில் வரையறுக்கப்பட்டுள்ளதா? அப்படி எதுவுமே இல்லாத சூழலில், அரசியலுக்காக ஏன் எங்களைப் போன்றோரை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறீர்கள்.

தலைவர்கள் அவர்களே! உங்களுக்கு அரசியலும், கல்வியும் தொழில். ஆனால் கல்விதான் எங்கள் வாழ்வாதாரத்துக்கு மூலதானம். மோடி எதிர்ப்பு என்ற அரசியலுக்காக தரமான கல்வியை தடுத்த நிறுத்த வேண்டாம். உங்கள் குடும்ப பிள்ளையும், எங்கள் வீட்டு பிள்ளையும் சமமான கல்வியை படித்துவிடக்கக்கூடாது என நீங்கள் நினைத்தால், தேர்தல் நேரத்தில் நாங்கள் மாற்றியோசிப்போம். விடுபட்டவைகளை அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.