பாலசிங்கத்தை நிராகரித்த பிரபாகரன்! பிரியங்கா – நளினி சந்திப்புக்குப் பின் நிலைப்பாட்டை மாற்றிய இந்தியா! அதிரவைக்கும் ரகசியங்கள்!

0
46

ஆண்டன் பாலசிங்கத்தின் முக்கிய யோசனைகளை எல்.டி.டி.. தலைவர் பிரபாகரன் நிராகரித்ததே போரில் எல்.டி.டி.ஈ. தோற்றதற்கு காரணமாக கூறப்படுகிறது. வடக்கு மாகாண சுயாட்சிக்கு மஹிந்த ராஜபக்ச சம்மதித்த நிலையில், பிரபாகரன் அதை ஏற்காததே, பல லட்சம் உயிரிழப்புகளுக்கும், இலங்கை தமிழர்களின் இன்றைய அவல நிலைக்கும் காரணமாகக் கருதப்படுகிறது.

இலங்கை அரசு, எல்.டி.டி.. இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நார்வே, அதற்காக தனது நாட்டு அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை 2000-ம் ஆண்டு அனுப்பிவைத்தது. அவர் பல கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த நிலையில், இறுதிகட்ட போரில், இலங்கை அரசு வென்றது. இந்நிலையில், இலங்கையின் டெய்லி மிரர் பத்திரிகையின் ஆன் லைன் பிரிவுக்கு எரிக் சொல்ஹெய்ம், ஜும் மூலம் பேட்டி அளித்துள்ளார். அதில், பல உண்மைகளை அவர் உடைத்துப் பேசியுள்ளார். இனி அவரது பேட்டியின் சாராம்சம்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்

பிரபாகரன் நன்றாக சமைக்கக்கூடியவர். போராளி அமைப்புகளில், வான்படையும், கப்பற் படையும் வைத்திருந்தது, அவரது தலைமையிலான எல்.டி.டி.. அமைப்புதான். பிரபாகரன் அமைதியை விரும்பினார், ஆனால் அவரிடம், அரசியல் மற்றும் உலக நடப்புகள் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. ‘புலம் பெயர் தமிழர்களின் தவறான அறிவுரைகளை கேட்டதும் அவரது பின்னடைவுக்கு காரணமாகிவிட்டது’. பல முக்கிய தருணங்களில் பாலசிங்கத்தின் அறிவுரைகளை அவர் ஏற்கவில்லை. புலிகள் அமைப்பு முழுபலத்துடன் இருந்தபோதும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதில் உறுதியாக இருந்தார். அனால், அது முறைப்படி அடுத்தடுத்த கட்டங்களாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆண்டன் பாலசிங்கம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆஸ்தான அரசியல் ஆலோசகர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், பிரபாகரனின் ஆலோசகர், நம்பிக்கைக்கு பாத்திரமானவர். ஆனால், அமைப்பின் செயல்பாட்டில், ராணுவ திட்டமிடுதலில் தலையிடமாட்டார். இலங்கையின் தெற்கு பகுதி, உலக நாடுகள், அமைதிப் பேச்சுவார்த்தை ஆகியவற்றை பற்றி பிரபாகரனுக்கு, பாலசிங்கம் தொடர்ந்து அறிவுரை சொல்லுவார்.

பிரபாகரன், பாலசிங்கத்தின் பேச்சை கேட்டிருந்தால், பல இழப்புகளை தவிர்த்திருக்கலாம், இலங்கை தமிழர்களின் நிலைமையும் மாறியிருக்கும். ஒருகட்டத்தில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணலாம், ராணுவத் தாக்குதல் கூடாது என நினைத்தார். இவரது அறிவுரையை பிரபாகரன் எப்போதெல்லாம் முழுமையாக கேட்டாரோ, அப்போதெல்லாம் நல்ல பலன் கிடைத்தது.

‘ஒன்றுபட்ட இலங்கையில், சுயாட்சியுடன் வடக்கு மாகாணத்தை ஆட்சிபுரிவது என்ற பாலசிங்கத்தின் யோசனையை, பிரபாகரன் ஏற்கவில்லை’. புலம்பெயர் தமிழர்களின் தவறான அறிவுரைகளால், தனி ஈழம் ஒன்றே தீர்வு என்பதில் பிரபாகரன் திடமாக இருந்தார். பாலசிங்கம் அறிவுரையை கேட்டிருந்தால், இலங்கை தமிழர்களின் நிலை மேம்பட்டிருக்கும்.

இந்தியா, இலங்கை

இலங்கை அரசும் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பியது. பிரபாகரன், ராஜபக்ச தூதுவர்கள் ஜெனிவாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதேநேரம், பிரபாகரனை சந்தித்துப்பேச மஹிந்த ராஜபக்ச விருப்பம் தெரிவித்தார். பேச்சுவார்த்தையை உடனடியாக முடித்து தீர்வு கண்டுவிட வேண்டும் என இலங்கை நினைத்தது. ஆனால், புலிகள் வேகம் காட்ட விரும்பவில்லை.  தமிழர்களுக்கு தன்னாட்சி, சுய நிர்ணய உரிமை கொடுக்கத் தயார்’, ஆனால், அவை ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருக்க வேண்டும் என மஹிந்த வலியுறுத்தினார். பாலசிங்கம் இதை ஏற்ற நிலையில், பிரபாகரன் நிராகரித்தார்.

அமைதிப்பேச்சுவார்த்தை காலத்தில், புலிகள் அமைப்பு ஒழுங்கை கடைப்பிடித்த நிலையில், இலங்கை அரசோ, அந்த கால இடைவெளியை பயன்படுத்தி, ராணுவத்தை பலப்படுத்திக்கொண்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதில் உறுதியாக இருந்தது. ஆனால், 2008-ல் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. (செப்டம்பரில் நளினிபிரியங்கா சந்திப்பு). ‘இராணுவம் மூலம் பிரச்னையை முடிக்க நினைத்த இந்தியா, தேவையான ராணுவ உதவிகளையும், தளவாடங்களையும் கொடுத்தது.’

அமைதிப் பேச்சுவார்த்தை

சிங்கள அடிப்படைவாதிகள் எங்களை எல்.டி.டி.. ஆதரவாளர்கள் என்றே முத்திரை குத்தினார்கள். இலங்கையின் இரு பெரும் கட்சிகளான இலங்கை சுதந்திரா கட்சி, ஐக்கிய தேசிய கட்சி இடையேயான கருத்து மோதலும் எங்களுக்கு சுணக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், பிரபாகரன், பாலசிங்கம், சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதற்கு ஆதரவாகவே இருந்தனர். அங்கள் எங்களை நம்பினார்கள். ஆனால்வடக்கு மாகாண சுயாட்சி என்பதில் புலிகளை எங்களால் சமாதானப்படுத்த இயலவில்லை’. இந்தியாவின் ராணுவ ஆக்ஷன் என்ற திட்டம் அமைதிப்பேச்சுவார்த்தையில் பின்னடையை ஏற்படுத்தியது.

பிரபாகரன் நிராகரிப்பு

இறுதி யுத்தத்தின்போது, அதாவது 2009 ஏப்ரலில், நீங்கள் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள், வெற்றிக்கு வாய்ப்பே இல்லை, எனவே, பொதுமக்களையும், எல்.டி.டி.. அமைப்பினரையும் கப்பல் மூலம் வெளியேற்றலாம். அதற்கு நார்வே உதவி செய்யும்.  அவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதைவைத்து, அவர்களை தெற்கு பகுதிக்கோ அல்லது வெளிநாட்டு அனுப்பலாம் என்ற யோசனையை பிரபாகரன் நிராகரித்தார்.

பூலித்தேவன், நடேசன்

இறுதி யுத்தம் தொடங்கியவுடனேயே நார்வே சென்றுவிட்டேன். மே மாதம் 17-ந் தேதி புலிகளின் அமைதி செயலகத் தலைவர் பூலித்தேவன் தொலைபேசியில் அழைத்து, சிங்கள ராணுவத்திடம் சரணடைய உதவுமாறு கோரினார். போர்க்களத்தில் இருக்கிறீர்கள், இது தாமதமான முடிவு  என்று கூறியதுடன், வெள்ளைக் கொடியோடு, சரணடைய வருவதாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்துக்கொண்டே செல்லுமாறு அறிவுறித்தினோம். அதேநேரம், அவர்கள் சரணடைய விரும்புவதை பசில் ராஜபக்சவிடமும் தெரிவித்தோம். ஆனால், பூலித்தேவனும், போலீஸ் பிரிவு தலைவர் நடேசனும் கொல்லப்பட்டதாக மறுநாள் தெரியவந்தது. இது போர்க்குற்றமாகும்.

கிடைத்த வாய்ப்பை பிரபாகரன் நழுவவிட்டார், வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருந்தால், ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி அந்தஸ்துடன் வடக்கு மாகாணம் தமிழர்களால் ஆளப்பட்டிருக்கும், பல லட்சம் பேர் உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என்பதே எரிக் சொல்ஹெய்ம் பேட்டியின் சாராம்சமாகும்.

Source – http://www.dailymirror.lk/opinion/The-Diaspora-gave-Prabakaran-all-the-wrong-advice-Erik-Solheim/231-195009

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry