புதுச்சேரி ‘பாஜக’-வை கம்பெனி போல நடத்தும் சாமிநாதன்! ‘VCC’ நாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு!

0
190

புதுச்சேரி மாநில தலைவரும், நியமன எம்.எல்..வுமான சாமிநாதன் பாஜகவை கம்பெனி போல நடத்துவதாக விசிசி நாகராஜன் குற்றம்சாட்டுகிறார். மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சி கேள்விக்குறியாகிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இதுபற்றி புதுச்சேரி பாஜக மாநில செய்தித் தொடர்பாளர்விசிசிநாகராஜன், வேல்ஸ் மீடியாவிடம் பேசியபோது, பெயரளவுக்கு நிர்வாகிளை நியமிக்கும் சாமிநாதன், அவர்களை செயல்படவிட்டால்தானே கட்சி வளரும். கட்சியை கம்பெனி போலத்தானே அவர் நடத்துகிறார்.

கட்சி தொடர்பான அறிக்கைகள் அவர் பெயரில் மட்டும்தான் வெளிவர வேண்டும் என நினைக்கிறார், செய்தித் தொடர்பாளரான என்னை செயல்படவே அனுமதிப்பதில்லை. ஹெச். ராஜா புதுச்சேரி வந்திருந்தபோது, மேடையில் அமர்ந்திருந்த மாநில நிர்வாகியான என்னை கீழே இறங்கச் சொல்லி அவமானப்படுத்தினார், இந்த அளவில்தான் அவர் கட்சியை நடத்தி வருகிறார். பிறகு எப்படி கட்சி வளரும் என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

வி.சி.சி. நாகராஜனின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் நாகராஜன் ஆர்வம் காட்டுவார். இதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார். அவருக்கு எதையும் மறைத்து செய்யத் தெரியாது, யாருக்கு உதவி செய்தாலும், அதை எங்களைப் போன்றோரிடம் வெகுளித்தனமாக சொல்லுவார். அதிமுகவில் மாணவரணி தலைவராக இருந்தார்.

எம்.எல்.. பாஸ்கருக்கு பண உதவி தொடங்கி பல உதவிகளை செய்துள்ளார். அவருடன் நெருக்கமாக இருக்கும்போதே, எம்.எல்..வுக்கு நேர் எதிரணியாக செயல்பட்ட புருஷோத்தமன் ஆதரவாளராகவும், பின்னர் ஓம் சக்தி சேகர் ஆதரவாளராகவும் இருந்தார். என்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் சேர முயற்சித்து, பின்னர் பாஜகவுக்கு தாவினார். அவருக்கு கட்சித் தலைமை செய்தித்தொடர்பாளர் பொறுப்பு வழங்கி அழகு பார்த்தது.

சாமிநாதன் அலுவகத்துக்கு டேபிள், சேர் முதற்கொண்டு வாங்கிப்போட்டார். அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். சாமிநாதனுக்கு செய்த சில உதவிகளை,  ஊடக நண்பர்களிடம் உளறிக்கொட்டியதால், அது செய்தியானது. இதனால் கடுப்பான சாமிநாதன் அவரை ஓரங்கட்ட ஆரம்பித்தார்.

அதன்தொடர்ச்சியாக மோடி பிறந்தநாள் சுவர் விளம்பரங்களில் அவரது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அவரை அழைப்பதில்லை. மேலும் அவரது தந்தை மறைவுக்கு சாமிநாதன் பங்கேற்கவில்லை, அவரது பிறந்தநாளையும் கண்டுகொள்ளவில்லை.

கட்சிக்காக செலவு செய்ய யோசிக்காத ஒருவரை ஓரம்கட்டுவதால், யாருக்கு நஷ்டம், இதனால் கட்சி வளர்ச்சிதான் பாதிக்கப்படுமே தவிர, நாகராஜனுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சாமிநாதனுக்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயமும் அவருக்கு கிடையாது என விரிவாக பேசினார்கள்.

அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டதைப் போல, பாஜகவிலும்விசிசிநாகராஜன் ஓரங்கட்டப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சிக்கும், தலைவர்களுக்கும் நிறைய செலவு செய்யும் அவர், தனி ஆவர்த்தனம் செய்வபராக மற்றவர்கள் பார்வைக்கு தெரிவதால், எந்தக் கட்சிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry