வெகுவாகக் குறைந்த கேஆர்எஸ் அணை நீர்மட்டம்! தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பது சந்தேகம்!

0
32
Karnataka stares at drought as water levels in reservoirs dip due to weak monsoon | Photo Credit : DH

கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை பொழிவு தாமதமாகியுள்ளதால் குடகு, ஷிமோகா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்கள் வறண்டு காணப்படுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது.

இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர்(கேஆர்எஸ்) அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 77.68 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 500 கனஅடி அளவு நீர் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது என‌ காவிரி நீர்ப்பாசன கழகம் தெரிவித்துள்ளது.

Also Read : சென்னையில் இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம்! பேட்டர்சன் கேன்சர் சென்டர் ஏற்பாடு!

கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக குறைந்துள்ளதால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவின்படி ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. .

இதுபற்றி கூறும் காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள், “கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 106 அடியாக இருந்தது. இந்த ஆண்டு 77 அடி மட்டுமே இருக்கிறது. மைசூரு, மண்டியா விவசாயிகளின் பாசனத்துக்காக கால்வாய்களில் நீர் திறக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 74 அடிக்கு கீழே குறைந்தால் பெங்களூரு, மைசூரு ஆகிய மாநகரங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதிலும் சிக்கல் ஏற்படும்’’ என்றனர்.

கடந்த ஆண்டை விட குறைவான பருவமழை காரணமாக நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும், ஜூலை முதல் வாரத்திற்குள் பருவமழை கணிசமான பகுதிகளை எட்டாவிட்டால் கர்நாடகம் வறட்சியை சந்திக்கும் என்றும் வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Featured Videos form VELS MEDIA

நீர்நிலைகளை தனியார்மயமாக்குவதா?அரசு செய்வது ஜனநாயக விரோதம்! Land Consolidation! Poovulagin Nanbargal

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry