தடுப்பூசி அனுப்புமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்! மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று கணிப்பு!

0
5

கொரோனா சிகிச்சையில் அத்தியாவசிய மருந்தான ரெம்டெசிவிர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது, 20 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து அனுப்ப வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “தமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும். தினமும் 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசியை அனுப்புங்கள். குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசி உடனே வழங்க வேண்டும். செங்கல்பட்டில் தயாராக உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். கொரோனா சிகிச்சையில் அத்தியாவசிய மருந்தான ரெம்டெசிவிர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாதுஇவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மே 1-ம் தேதிக்குப் பின் ஸ்புட்னிக் உள்ளிட்ட புதிய வகை தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பரவலாக பிரித்து வழங்கப்படும். கொரோனா 2 ஆம் அலை பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் கட்டுக்குள் தான் இருக்கிறது. அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கொரோனா பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், லேசான அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிகுறி இல்லாமல் இருந்தாலோ, லேசான அறிகுறி இருந்தாலோ மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூடுவதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை கொரோனா வார்டுகளுக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளோம். சென்னையில் மே மாத மத்தியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது நாளொன்றுக்கு சுமார் 16,000 கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கூடுதலாக நாளொன்றுக்கு 25,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதுஎன்று கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry