பேருந்துகளில் 100% இருக்கைகளை பயன்படுத்த அனுமதி! கோவிட்-19 தொற்று பரவல் குறைவால் தமிழக அரசு நடவடிக்கை!

0
16

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி பேருந்துகளும் நூறு சதவீத இருக்கைகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசானது தளர்வுகளை அறிவித்து வந்தது. அதன்படி அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 60 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கோவிட்-19 தொற்று பரவல் பெருமளவு குறைந்துள்ளதையடுத்து, பேருந்துகளில் பயணிகள் 100 சதவிகித இருக்கை வசதியையும் பயன்படுத்த தமிழக அரசு இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தேவைக்கேற்ப பேருந்துகளை அதிகரித்துக் கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுஎன அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி கல்லூரி பேருந்துகளில் நூறு சதவீத இருக்கைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தெரியவந்துள்ளது

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry