மாடல் பள்ளிகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணம்! கருணாநிதி கொள்கைகளுக்கு முரணானது என கல்வியாளர்கள் கொந்தளிப்பு!

0
46

தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. அந்த பள்ளிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், உண்டு உறைவிட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில், முதற்கட்டமாக 15 மாதிரி பள்ளிகள் துவங்கப்பட உள்ளன. இப்பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடிப்படை தேர்வு என்ற பெயரில் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Also Read : 10ம் வகுப்பு சேர நுழைவுத் தேர்வு நடத்துவதான் சமூக நீதியா? முரண்பாடுகளின் மொத்த உருவமாய் பள்ளிக் கல்வித்துறை!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry