10ம் வகுப்பு சேர நுழைவுத் தேர்வு நடத்துவதான் சமூக நீதியா? முரண்பாடுகளின் மொத்த உருவமாய் பள்ளிக் கல்வித்துறை!

0
79

தமிழகத்தில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அந்தப் பள்ளிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், உண்டு உறைவிட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில், முதற்கட்டமாக 15 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், மாதிரிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் சேர்ந்திட நாளை அடிப்படை தேர்வு நடத்த உள்ளதாக மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலாளரான விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதன் அறிவித்துள்ளார்.

Also Read : மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது #Airtel! வருவாய் போதவில்லை என குறைபட்டுக்கொள்ளும் சுனில் மிட்டல்!

இந்தத் தேர்வு வரும் சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என்றும், ஓஎம்ஆர் தாள்களை கொண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும், தேர்வுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து வர வேண்டும் என அவர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 240 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதில் 120 மாணவர்களும் 120 மாணவிகளும் இத்தேர்வினை எழுத உள்ளனர். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.

நுழைவுத் தேர்வு கூடாது என்ற கொள்கை அடிப்படையிலும்; அகில இந்திய நுழைவுத் தேர்வு மாநில உரிமைகளில் தலையிடும் காரியம் என்பதாலும், திமுக வைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும் அதை திமுக எதிர்க்கும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறியிருந்தார். அதன்படி, ஆட்சி அமைந்தவுடன் நீட் ஒழிப்புக்கு முதல் கையெழுத்து என திமுக பிரச்சாரம் செய்தது. ஆனால் ஆட்சி அமைந்து 20 மாதங்களாகியும் இதுவரையில் நீட் ஒழிப்புக்கான முயற்சியை திமுக அரசு செய்யவில்லை.

Also Read : அதானிக்கு சாதகமாக புதிய சட்டத் திருத்தங்கள்! RTI மூலம் அம்பலம்! பெரும் சர்ச்சையில் சிக்கிய மோடி அரசு!

அதேபோல் சியுஇடி(CUET) எனப்படும் மத்திய பல்கலைக்கழகங்கள் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை என்கிற மத்திய அரசின் அறிவிப்புக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. நீட் தேர்வு கூடாது, சியுஇடி தேர்வு கூடாது, ஆனால் மாதிரி பள்ளிகளில் சேர 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓம்ஆர் தாள் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்பது நகை முரணாக இல்லையா? அதிலும், ஒரு மாவட்டத்திற்கு 240 மாணவர்கள்தான் தேர்வு எழுத அனுமதிப்படுவார்களாம். இதுதான் சமூக நீதியா?

அதேபோல், டெட் தேர்வில் தகுதி பெற்ற ஆசிரியர்கள், தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணி ஆணையைப் பெற முடியும். இப்படி இரண்டு படிநிலைகளில் வடிகட்டிய பிறகே ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். தரமான, தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யத்தான் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது என்று சொன்னால், தரமான, தகுதியான மருத்துவர்களை உருவாக்க நடத்தப்படுவதாக கூறப்படும் நீட் தேர்வை தமிழக அரசு எதிர்ப்பது ஏன்? இது நகை முரணாக இல்லையா? ஒருபுறம் நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டு, மறுபுறம் அரசு மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதான் திராவிட மாடலா?

Also Read : NEETஐ எதிர்த்துக்கொண்டு TET தேர்வு நடத்துவது சரியா? டெட் தேர்வில் வென்றவர்களுக்கு போட்டித் தேர்வு வைப்பதுதான் சமூக நீதியா? வேல்ஸ் பார்வை!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry