கனிமவளங்கள் கடத்துபவர்களிடம் முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசூல்! எஸ்.பி. வேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டு!

0
35
S.P. Velumani | Coimbatore Press Meet

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “ஆட்சியரிடம் கோவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்தோம். வாளையார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதி வழியாக கனிமவளங்கள் விதிகளை மீறி கேரளாவிற்கு கடத்தப்படுகிறது.

அரசிற்கு பணம் செலுத்தாமல் போலியாக ரசீது அடித்து கனிமவளங்கள் கடத்தப்படுகிறது. திமுக அரசு நிறைய பேரை நியமித்து பணம் வசூல் செய்து வருகிறது. ஒரு யூனிட்டுக்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்கிறார்கள். தினமும் 5 ஆயிரம் லோடு கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. கனிம வளங்கள் கடத்தி செல்வதை ஏற்க முடியாது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கனிமவளங்கள் கடத்துபவர்களிடம் முதலமைச்சர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசூல் செய்வதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையை அரசு தடுக்கவில்லை எனில், மக்களே தடுத்து நிறுத்துவார்கள்.

Also Read : பாலைவனமாகும் தமிழ்நாடு? திட்டமிட்டு நசுக்கப்படும் வேளாண்மை! கனிமங்கள் கடத்தலைத் தடுப்பதில் அக்கறையின்மை!

கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர். நீதிமன்ற வளாகத்திற்குள் பெண் மீது ஆசிட் வீச்சு, கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. காவல்துறை செயல்படவில்லை. சிறுவாணி ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதை திமுக அரசும், மாவட்ட நிர்வாகமும் தடுத்து நிறுத்தவில்லை. தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு எந்த புதிதாக திட்டங்களையும் தரவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை வேகமாக முடிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் எந்த வேலையும் செய்யவில்லை.

கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. அத்திக்கடவு- அவிநாசி திட்டம், மேம்பாலங்கள் ஆகிய வேலைகளை வேகமாக முடிக்க வேண்டும். வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பராமரிப்பு இல்லாததால் 20 கி.மீ. தூரத்துக்கு துர்நாற்றம் வீசுகிறது. வெள்ளலூர் பேருந்து நிலையம் சுயநலத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Recommended Video

2 மாவட்டங்களில் இருந்து மட்டும் ரூ.100 கோடி வசூல்! Mining Scam | Sella Rajamani Exclusive Interview

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry