இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருமே நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வார்கள். இது ஒரு சடங்கு மட்டுமல்லாமல், பல்வேறு நன்மைகளையும் அளிக்கக் கூடியதாகும். பெண்கள், குங்குமம் இடுவதால், மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெறுகிறார்கள். குங்குமம் வைப்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கப்பட்ட பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினை புரிவதால் குங்குமம் சிவப்பு நிறத்தைப் பெறுகிறது.
Also Read : இருட்டான ரூமில் தூங்குவதன் அவசியம் பற்றி தெரியுமா? நைட் லேம்ப் போட்டுக்கொண்டு தூங்கக் கூடாதா?
வெர்மிலியன் என்றழைக்கப்படும் சிந்தூர் இந்திய கலாச்சாரத்தில், குறிப்பாக திருமணமான பெண்களுக்கு ஒரு சின்னம் என்றே கூறலாம். இது வெறுமனே குறியீடாக மட்டுமல்லாமல், உடல், மனம் மற்றும் உணர்ச்சி நலன் வாயிலாக பலதரப்பட்ட நன்மைகளை அளிக்க வல்லது.
குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளைத் தோற்றுவிக்கும். குங்குமம் இட்ட எவரையும் வயப்படுத்துவது கடினம். தெய்வத்தன்மையும் மருத்துவத் தன்மையும் உள்ள குங்குமத்தை அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.
திருமணமான பெண்கள் நெற்றியின் நடுவிலும், வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு. ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது விசேஷம். குங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. பதற்றம் அல்லது வெப்பத்தால் ஏற்படும் தலைவலியைக் குறைக்க இது உதவுகிறது.
இரு புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைப்பதால் நினைவாற்றல், சிந்திக்கும் திறன் மேம்படும் என மருத்துவ ஆராய்ச்சி சொல்கிறது. அங்கு அழுத்தம் ஏற்படும் வகையில் மோதிர விரலால் அழுத்தி பொட்டு வைக்கும் போது மூளையின் செயல்திறன் தூண்டப்படுவதாக தெரிய வந்துள்ளது. மஞ்சள், சுண்ணாம்பு, படிகாரம், ஆகியவற்றிற்கு எதிர்மறை சக்திகளை விலக்கும் ஆற்றல் இருக்கிறது.
Also Read : கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட வேண்டுமா? மைத்ரேய முகூர்த்த நேரத்துல ஒரு சின்ன தொகையை கொடுங்க!
இரு புருவ மத்தியை ‘ஆக்ஞா சக்கரம்’ என்றும், அப்பகுதியிலிருந்து எலக்ட்ரோ மேக்னடிஸம் எனும் மின்காந்த சக்தி வெளிப்படுகிறது எனவும் இந்திய யோகக் கலை கூறுகிறது. பொட்டு வைப்பதால் அப்பகுதி குளிர்ச்சி அடைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாக உதவி புரிகிறது. அதன்மூலம் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
சிவப்பு நிறமானது உணர்ச்சி மற்றும் அன்பைக் குறிக்கிறது. அதாவது இது காதல் உணர்வுகளை உயர்த்தக் கூடியதாகும். தம்பதிகளிடையே நெருக்கம் மற்றும் பிணைப்பை உருவாக்குகிறது. இந்த உணர்ச்சி ரீதியான பிணைப்பு மிகவும் திருப்திகரமான பாலியல் உறவுக்கு வழிவகுக்கிறது. எனவே, குங்குமம் அல்லது சிந்தூர் என்பது ஒரு கலாச்சார சின்னம் மட்டுமல்ல. குங்குமம் வைத்துக்கொள்வது எளிய பழக்கம் மட்டுமல்லாமல், மனதை ஒருமுகப்படுத்தவும், இயற்கையாகவே செறிவு ஆற்றலை அதிகரிக்கவும் உதவும் எனக் கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவற்றால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு குங்குமம் மிகவும் பயனுள்ள தேர்வாகும். இது மனநிலையை இயல்பாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் குங்குமத்தில் மஞ்சள், சுண்ணாம்பு மற்றும் பாதரச சல்பைடு போன்ற இயற்கை பொருட்கள் நிறைந்துள்ளது. இவற்றில் மனதை அமைதிப்படுத்துவதற்கு உதவும் பண்புகள் நிறைந்துள்ளது.
குங்குமத்தை மோதிர விரலால்தான் இடவேண்டும். குங்குமத்தை இடது கையில் வைத்துக் கொண்டு வலது கை விரலால் தொட்டு வைப்பது கூடாது. வலது கை கட்டை விரல் மற்றும் மோதிர விரலால் குங்குமத்தை வைத்துக் கொள்வது மங்கலத்தையும், ஆரோக்யத்தையும் தரும். கட்டை விரலால் குங்குமம் இடுவது மனதில் துணிச்சலை தரும். ஆள்காட்டி விரலால் குங்குமம் இடுவது நிர்வாகத் திறமையை அதிகரிக்கும். நடுவிரல் மூலம் குங்குமம் இடுவது ஆயுளை அதிகரிக்கும். நம் வசதிக்காக பல வண்ணங்களில் ஸ்டிக்கர் பொட்டுகளை வைத்துக் கொண்டாலும், நல்ல நாள், பண்டிகைகளின் போதாவது தவறாமல் குங்குமம் வைத்துக்கொள்ளலாம்.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry