போலீஸாரை பகிரங்கமாக எச்சரிக்கும் விசிக வன்னியரசு! டாக்டர் ராமதாஸ், சீமான் மீதும் பாய்ச்சல்!

0
43

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, தமிழக காவல்துறை அதிகாரிகளை பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

‘அரண் செய்’ என்ற வலைதள தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் சுருக்கத்தை பார்க்கலாம். அதில், “புதிதாக வந்துள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு விடுதலை சிறுத்தைகளின் வரலாறு தெரியாது. அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடிஎன்ற முழக்கத்தை முன் வைத்துதான் அரசியல் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் மோரூரில் விசிக கொடியேற்றுவது தொடர்பான பிரச்சனை குறித்து பதிலளித்துள்ள அவர், திமுகவுடன் கூட்டணி என்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி அடிமைப் பத்திரம் எழுதித் தரவில்லை என்றார். சீமானும், பெ. மணியரசனும் போலி தமிழ் தேசியம் பேசுகிறார்கள். ஆணவக் கொலைகளை டாக்டர் ராமதாஸ் ஆதரிக்கிறார்என்றும் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

முழு வீடியோவைக் காண: https://youtu.be/hw_Uu7I6e0Q

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry