விக்ரம் திரை விமர்சனம்! விஜய்சேதுபதியை துவம்சம் செய்யும் கமல்! அடுத்த கட்டத்தில் லோகேஷ் கனராஜ்!

0
261

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் மக்களின் மத்தியில் பல கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

கர்னல் விக்ரம் கமல்ஹாசனை அப்பாவாக தத்தெடுத்து வளர்க்கும் மகன் காளிதாஸ் ஜெயராம் காட்சிகளுடன் தான் படம் ஆரம்பமாகிறது. காளிதாஸின் மனைவி சோகமாக இருக்காங்க அவரது குழந்தைக்கு இதயத்தில் கோளாறு அதை கனிவாக பார்த்துக் கொள்ளும் தாத்தாவாக இருக்கிறார் கமல். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே காளிதாஸ் கொல்லப்படுகிறார். அதன் பின்னர், கமலையும் முகமூடி அணிந்து செயல்படும் கேங் கொல்வதாக காட்டுகின்றனர்.

கமலையும் காளிதாஸையும் கொல்லும் அந்த கேங் யார் என்பதை கண்டுபிடிக்கும் ஸ்பெஷல் ஃபோர்ஸ் போலீஸ் அதிகாரியாக பகத் ஃபாசில் வருகிறார். முதல் பாதியில் அவரது விசாரணை காட்சிகள் தான் படத்தை அதிகளவில் கொண்டு செல்கிறது. தனது முட்டைக் கண்களால் அவர் நடித்து மிரட்டும் அழகு அட்டகாசம். அவருக்கு மனைவியாக காயத்ரி நடித்துள்ளார்.

ஷிவானி நாராயணன், மகேஷ்வரி மற்றும் மைனா நந்தினி என மூன்று மனைவிகளுடன் பிரம்மாண்ட வீட்டில் கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்கும் வியாபாரி சந்தனமாக விஜய்சேதுபதி மிரட்டுகிறார். பாப்பாய் கார்ட்டூனில் ஸ்பினாச் சாப்பிட்டால் சக்தி வருவதை போல, கஞ்சாவை எடுத்து கடித்த உடன் சக்தி வந்து விஜய்சேதுபதி அடிக்கும் இடங்கள் பக்காவாக செட் ஆகி இருக்கு. விஜய்சேதுபதி போலீஸ்காரரை சுட்டு விட்டு ஆட்டோவில் இருந்து இறங்கும் ஓப்பனிங் காட்சிக்கே கைதட்டல்கள் தெறிக்கிறது.

முகமூடி போட்டுக் கொண்டு கொலை, கொள்ளைகளை செய்யும் கூட்டத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பகத் ஃபாசில் இறங்கி இருப்பார். ஆரம்பத்தில், முகமூடி அணிந்த நபரை பிடித்து விட்டு அதை கழட்டி பார்த்தால் நரேன் இருப்பார். ஆனால், அதன் பின்னரும், முகமூடியின் வேட்டை தொடரும், யாரு அந்த கோஸ்ட் என தேடும் பகத் ஃபாசிலுக்கு இன்டர்வெல் பிளாக்கில் செம சர்ப்ரைஸ் இருக்கும்.

மகனை கொன்றவர்களை பழி வாங்கும் தந்தையாக கமல் போராடுவது தான் படத்தின் கதையாக இருக்கும் என நினைக்கும் இடத்தில் செம ட்விஸ்ட் கொடுத்து, ஒட்டுமொத்த போதைப் பொருட்களையும் அழித்து No Drugs Society ஆக மாற்றும் யுத்தத்தை கமல் செய்வது தான் விக்ரம் படத்தின் மூலக் கதை. ஒவ்வொரு நடிகருக்கும் அவருக்கான போர்ஷனை சரியாக கொடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தன்னை நிரூபித்து இருக்கிறார்.

விக்ரம் படத்தின் பிளஸ் என்றால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் என படத்தின் நடிகர்கள் மற்றும் டெக்னிக்கல் குழுவை சொல்லிக் கொண்டே போகலாம். படத்தின் மையக் கதை, இயக்குநர் வைத்துள்ள ட்விஸ்ட்டுகள், ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் என பல பிளஸ்கள் தமிழ் சினிமா ரசிகர்களை காலரை தூக்கி தியேட்டரில் கெத்தாக அமர வைத்துள்ளது.

கைதி படத்தை பார்க்காதவர்களுக்கு படம் சில இடங்களில் கனெக்ட் ஆகாமல் போகலாம். கைதி படத்தை போலவே விக்ரம் படத்தின் மையக் கதையும் அமைந்துள்ளது. ரகசிய ஏஜென்ட் என்கிற பெயரில் சந்தான பாரதி, வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் திடீரென சண்டை போடுவது என சில காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். ஆனால், இந்த காட்சிகள் படத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கவில்லை என்பது தான் ஆறுதல்.

கமல்ஹாசன் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் மோதும் சண்டைக் காட்சியை அன்பறிவு மாஸ்டர்கள் அதகளப்படுத்தி உள்ளனர். கஞ்சா அடித்து சக்தியை பெற்று விஜய்சேதுபதி கமலை வெளுத்து வாங்க, மூர்ச்சையாகி போகும் பேரக் குழந்தையை காப்பாற்றி விட்டு அந்த குழந்தை அழும் சத்தத்தால் எனர்ஜி பெறும் கமல், விஜய்சேதுபதியை துவம்சம் செய்யும் காட்சியில் தியேட்டரே எழுந்து கத்துகிறது.

மொத்தத்தில் தனது குரு கமல்ஹாசனுக்கு ஒரு சூப்பர் கம்பேக் படமாக விக்ரம் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகர் சூர்யா கடைசியில் ரோலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் வரும் அந்த காட்சி வெறித்தனம். இப்படியொரு கிரே ஷேட் கதாபாத்திரத்தை சூர்யா ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம் தான்.

With Inputs Filmi Beat

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry