வரலாறு படைத்தார் விராட் கோலி! 3 வகை போட்டிகளிலும் தலா 50 வெற்றிகள் பெற்று முத்திரை! பிசிசிஐ வியந்து பாராட்டு!

0
34

சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வகைப் போட்டிகளிலும் 50 வெற்றிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

மும்பையில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றதன் மூலம் கேப்டன் விராட் கோலி இந்தப் புதிய வரலாற்றை படைத்துள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றதையடுத்து தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்தது. மும்பையில் இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றியின் மூலம் உள்நாட்டில் தொடர்ந்து 14-வது முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அதுமட்டுமல்லாமல் கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து 11-வது டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணில் இந்திய அணி பெறும் 4-வது டெஸ்ட் தொடர் வெற்றியாகும். கடைசியாகக் கடந்த 1988-ம் ஆண்டு மும்பையில் ரிச்சர்ட் ஹாட்லி தலைமையில் வந்த நியூஸிலாந்து அணி மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் வென்றது. அதன்பின் இதுவரை இந்திய அணியை வென்றதில்லை.

இந்த டெஸ்ட் தொடரைவென்றதன் மூலம் விராட் கோலி அணிக்கு வந்தபின், டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் இந்திய அணி தலா 50 வெற்றிகளைப் பெற்றுள்ளது. கோலி அணிக்குள் வந்தபின் டெஸ்ட் போட்டிகளில் 50-வது வெற்றி, ஒருநாள் போட்டிகளில் 153 வெற்றிகள், டி20 போட்டிகளில் 59 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. 3 பிரிவுகளிலும் தலா 50 வெற்றிகளைச் சந்தித்த ஒரே வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி நிகழ்த்தியுள்ளார். இந்தச் சாதனை வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் கிடையாது.

டெஸ்டுகள்: ஆட்டங்கள் – 97, வெற்றிகள் – 50
ஒருநாள்: ஆட்டங்கள் – 254, வெற்றிகள் – 153
டி20: ஆட்டங்கள் – 95, வெற்றிகள் – 59

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 2008 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 97 டெஸ்டுகள், 254 ஒருநாள், 95 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கோலியின் அசுரத்தனமான இந்தச் சாதனையை பிசிசிஐ பாராட்டியுள்ளது. பிசிசிஐ டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்த்துகள் விராட் கோலி. டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 பிரிவுகளிலும் சர்வதேச அளவில் தலா 50 வெற்றிகளைச் சந்தித்த முதல் வீரர்” எனத் தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*