சிவசங்கரன் சிவசங்கர்பாபா ஆன வரலாறு! சுஜாதா என்ற மாமனிதரும் ஏமாற்றப்பட்ட கதை!

0
257

பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா, சென்னையில் மண்ணடியிலுள்ள ஒரு லாரி ஷெட்டில் கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டமைத்துள்ளார். பிரபல எழுத்தாளர் சுஜாதா தொடங்கி பலரும் இவரிடம் ஏமாந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் 1949, ஜனவரி 28-ம் தேதி பிறந்த சிவசங்கரன் வேதியியல்துறையில் பட்டப்படிப்பும், சரக்குகள், போக்குவரத்துக் கையாளல் பிரிவில் முதுகலைப் படிப்பும் முடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் மண்ணடியில் சிறிய அளவில் தொடங்கிய இவரது ஆன்மிகப் பயணம், சென்னை நீலாங்கரையில் தனி வீடு வாங்கி `சம்ரட்சணாஎன்ற இயக்கத்தைத் தொடங்கியதும், அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தது. ஆடிப்பாடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இறைவனுடன் கலப்பதுதான் ஆன்மிகம் என்ற அவரது போதனையால் கவரப்பட்டவர்கள், அவரை `சிவசங்கர் பாபாஎன அழைக்க பின்னர் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

சுஷில் என்பவருடன் இணைந்து 1999-ம் ஆண்டில் சென்னை புதுப்பாக்கத்தில் சுஷில் ஹரி என்ற பெயரில் சர்வதேச உறைவிட பள்ளிக்கூடத்தை ஏற்படுத்தியவர், பல்நோக்கு மருத்துவமனை ஒன்றை அமைத்தும் தன்னுடைய கட்டுமானங்களை விரிவு படுத்திக்கொண்டார். ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கு இடையே ஆபாசநமான ஜோக்குகளை சொல்வது, இடையிடையே நடனம் ஆடுவது, அப்போது மாணவிகள் மற்றும் பக்தைகளிடம் எல்லை தாண்டி நடந்துகொள்வது எனத் தனது பாலியல் எல்லை மீறல்களை அரங்கேற்றியிருக்கிறார்.

கடவுளுக்காக நான், கடவுளாக நான், 24 மணி நேரமும் நான் இறைவனுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறேன்என்றெல்லாம் கூறிவந்த சிவசங்கரன், தான் ஒரு கண்ணியமானவன் என பிரபல எழுத்தாளர் சுஜாதா உள்ளிட்டோரை நம்பவைத்துள்ளார். அதை நம்பி, ‘கற்றதும் பெற்றதும்தொடரில்தொடரில் சுஜாதா எழுதியவைதான் இது.

வீடுமின் முற்றவும்என்று சொன்ன நம்மாழ்வாரைக் காட்டிலும் சுருக்கமாக, ’விடு, வீடுஎன்று உபதேசித்து, சுவிஸ் சாக்லேட் தந்து என்னை ஆசீர்வதித்த சிவசங்கர் பாபாவை ஒரு ஹைடெக் யோகி என்பேன். .எஸ்.டி.என். கனெக்ஷன் மூலம் உலகோடு பேசுகிறார்; உறுத்தாமல் உபதேசிக்கிறார்.

கேளம்பாக்கத்தை அடுத்த அவரதுசம்ரட்சணாவசதிகள் 35 ஏக்கரில் பரவியுள்ளன. ஆஸ்பத்திரி அஞ்சு நட்சத்திர ஓட்டல் போல் இருக்கிறது. கட்டணம் ஒரு நட்சத்திரம் கூட இல்லை; இலவசமாம். வயசானவர்களுக்கு நிம்மதி தர, ஆரோக்கியமான சூழ்நிலையில் வீடுகள் கட்டிக் கொடுத்து, ‘கம்யூனிட்டி லிவிங்என்று அவரவருக்கு டியூட்டி போட்டுக் கொடுத்திருக்கிறார்.

சுஷீல்ஹரிசர்வதேசத் தரம் வாய்ந்த பள்ளியில் கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகள் ப்ளஸ் டூ வரை படிக்கிறார்கள். ஆசிரியர்கள் எல்லோரும் தன்னார்வலர்கள். கிராம மேம்பாட்டுக்கான சேவைகள், இலவச கல்யாணம், கராத்தே, ஜிம், விளையாட்டு மைதானங்கள், வேலைவாய்ப்பு, திறந்த கோயில்கள், மசூதி, சர்ச், ஜெயின் கோயில், புத்த விஹாரம்இத்தனையையும் ஒருவர் தீர்மானித்து ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றியது வியக்க வைக்கிறது.

எல்லாம் உடலுழைப்பு; மன வைராக்கியம். இதனை இதனால் இவன் முடிக்கும் என்று அவரவருக்கு அவரவர் பணிகளைப் பிரித்துக் கொடுத்து, பசுமையும் மரங்களும் மலர்களும் சூழ்ந்த ஆரோக்கியமான தனி நகரம் அமைத்திருக்கிறார். அக்கடா என்று போய் இருந்துவிடலாமா என்று தோன்றியது.

ஆனால், அவ்வளவு சுகஜீவனமிருந்தால் எனக்கு எழுத வராது. என்னை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்பும் மயிலாப்பூர் கொசுக்களும், நிசாசரர்களான தண்ணி லாரிகளின் நியூட்ரல் உறுமல்களும், அக்கம்பக்கத்தில் குழந்தைகளின் கீச்சுக்குரல் அலறல்களும், அண்டை வீட்டில் இதற்கு மேல் சத்தமாக வைக்க முடியாத டி.வியும், எங்கள்கிவியின் அவ்வப்போதையவள்ளலும் எழுதத் துணையாக வேண்டும்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் சிலர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அவர்களைக் கருவியாக வைத்து அமைப்புகள் தோன்றுகின்றன; விஸ்தாரம் அடைகின்றன; பரவுகின்றன. மேல்மருவத்தூர், கீழ்மின்னல், அமிர்தானந்தமயி, புட்டபர்த்தி என ஒருவரைக் குவி மையமாக வைத்து, அவர் பேர் சொல்லி அற்புதச் செயல்களும், தர்ம காரியங்களும் நிகழ்கின்றன. இறைவன் ஏதோ ஒரு காரியத்துக்காக பிரத்யட்சமாகத் தோன்ற விரும்பாத இந்த யுகத்தில், இவர்கள்தான் பிரதிநிதிகள்.

சிவசங்கர் பாபா என்னிடம் ஒரு யாக நெருப்பின் போட்டோவைக் காட்டி, ‘ருத்ர தாண்டவம் போலத் தோன்றுகிறது, பாருங்கள்என்றார். என் வைணவக் கண்களுக்குப் புல்லாங்குழல் கிருஷ்ணன் போல இருந்தது. அசப்பில் இயேசுவும் தெரிந்தார். ‘அவரவரிறையவர் குறைவிலர்என்று சுஜாதா எழுதியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry