‘தலைவி’ படத்திற்கு ’யு’ சான்றிதழ்! உற்சாகத்தில் படக்குழு! ரிலீஸ் தேதியை நிர்ணயிக்க தீவிரம்!

0
34

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதலைவிதிரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் யு சான்றிதழ் கொடுத்துள்ளது. இதனால், படக்குழு உற்சாகமுடன் இருக்கிறது.

.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்கங்கனா ரணாவத்தின் பிறந்தநாளையொட்டி கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

Also Read : என்ன வெறும் பொம்பளயா பார்த்தீங்கனா! தலைவி படத்தில் ஜெயலலிதாவாக மிரட்டும் கங்கனா ரணாவத்!

படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஏற்கனவே ஒரு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, பின்னர்  மாற்றப்பட்டது. தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி  ’தலைவிவெளியாகும் என்று அறிவித்த படக்குழு, பின்பு கொரோனாவால் படத்தை இப்போதைக்கு வெளியிட முடியாது என்று விளக்கம் தந்தது.

இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக வெளியான தகவலையும் படக்குழுவினர் மறுத்தனர். இந்த நிலையில்தலைவிதிரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு எந்தவித வெட்டும் இன்றி சென்சார் அதிகாரிகள்யுசான்றிதழ் கொடுத்துள்ளனர். தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்புகளின் சென்சார் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry