ஆரம்பகாலங்களில் பானங்களை வாங்கி குடிப்பதற்கு மக்களிடம் செம்பு, சில்வர், மண்குவளை உள்ளிட்டவை பயன்பாட்டில் இருந்தன. அதன் பின்னர், பிளாஸ்டிக் கப்புகள் பயன்பாட்டிற்கு வந்தன. காலப்போக்கில் இதனைப் பயன்படுத்துவது ஆபத்து என சொல்லப்பட்ட நிலையில், அந்தப்பழக்கம் மாறி தற்போது பேப்பர் கப் பயன்பாட்டில் இருக்கிறது.
அலுவலக இடைவேளையில் டீ, காபி குடிக்கச் செல்லும்போது அவற்றை பேப்பர் கப்பில் அருந்துவதே பலரின் வழக்கம். மேலும், வெளியில் எங்கு சென்றாலும் பேப்பர் கப்பிலேயே டீ, காபி பரிமாறப்படுகிறது. கடைக்காரர்களுக்கு கிளாஸ் கழுவ சம்பளத்துக்கு ஆள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பேப்பர் கப்பில் டீ குடித்தால் நம் உடலுக்கு எவ்வளவு தீங்கு என்பது உங்களுக்கு தெரியுமா?
Also Read : மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 12 உணவுகள் எவை தெரியுமா? 12 Foods You Should Never Reheat!
பேப்பர் கப்பில் சூடான பொருட்களை சாப்பிடும்பொழுது அதில் இருந்து வெளிப்படும் வேதிப்பொருட்கள் நம் உயிருக்கே உலை வைக்கும் என்பதை அறிந்தால் பேப்பர் கப் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டீர்கள். பேப்பர் கப்பில் டீயோ அல்லது காபி சாப்பிட்டால் ஏற்படும் கொடூரமான விளைவுகளை தெரிந்துகொள்வோம்.
1. பேப்பர் கப்களில் ஊற்றப்படும் குளிர்பானங்கள், சூடான பானங்கள் போன்றவை ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக, இந்த கப்புகளில் ‘ஹைட்ரோஃபோபிக்’ எனப்படும் மெல்லிய மெழுகுப்பூச்சு பூசப்படுகிறது. இது, ‘பாலித்தீன்’ எனப்படும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது.
2. இந்த கப்புகளில் 85 முதல் 90 டிகிரி சூடான டீ, காபி உள்ளிட்ட சூடான பானங்களை ஊற்றினால், சிறிது நேரத்தில் இந்த பிளாஸ்டிக் பூச்சு உருகி, பானங்களில் கலக்கிறது.
3. உதாரணத்துக்கு ஒரு கப்பில் 15 நிமிடங்கள் வரை சூடான பானங்களை வைத்திருந்தால், 25,000 நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் அதில் கலக்கின்றன. இவை கண்களுக்குத் தெரியாது.
4. ஒரு நபர் தினமும் 3 முறை பேப்பர் கப்புகளில் டீ, காபியை குடிக்கிறார் என்றால், 75 ஆயிரம் பிஸாஸ்டிக் நுண் துகள்கள் அவருடைய வயிற்றுக்குள் செல்கிறது.
5. இதன் மூலம், பலாடியம், குரோமியம், கேட்மியம் போன்ற கடின உலோக நுண்துகள்கள் ஜீரண உறுப்புகளுக்குச் சென்று, பிற்காலத்தில் உடல்நலத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, அல்சர், குடல் புற்றுநோய் போன்றவையும் ஏற்படலாம்.
6. பேப்பர் கப்பில் டீ, காபி குடிக்கும் இளம் வயதினருக்கு, உடல் பருமன், தொப்பை, அதிகப்படியான உடல் எடை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் பல்வேறு உடல் நலக் கோளாறுகளும் இந்த பேப்பர் கப் பயன்பாட்டினால் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
7. பொதுவாக உணவு வகைகளில் இருக்கும் அமிலத்தன்மை, காரத்தன்மை அதிகமாக இருந்தால், அது பிளாஸ்டிக்குடன் சேர்ந்து நச்சுத்தன்மை உடையதாக மாறும். அதாவது, பிளாஸ்டிக் பொருளில் சில வேதிப் பொருள்கள் இருக்கின்றன. அதேபோல, உணவுப் பொருள்களிலும் சில வேதிப்பொருள்கள் இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்திவிடும்.
8. இந்த பேப்பர் கப்களில் இருக்கும் ரசாயனப் பொருள்களால் பெண்களுக்கு ஹார்மோன் உற்பத்தியில் பிரச்சினைகள் ஏற்பட்டு, சிறுமிகள் மிக வேகமாகப் பருவமடைதல், மாதவிடாய் பிரச்சினைகள், கருப்பைக் கோளாறு, மார்பகப் புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
Also Read : கருப்பு பூஞ்சைகள் உள்ள வெங்காயத்தை சாப்பிடலாமா? Black Fungus on Onion and Mucormycosis!
கண்ணாடி கிளாசிலும், எவர்சில்வர் டபரா செட்டிலும் காபி குடித்த காலத்தில் நாம் இவ்வளவு புற்று நோய்களையும், வயிற்று உபாதைகளையும் கண்டதில்லை. ஆனால், தற்பொழுது மேற்கண்ட உடல் பிரச்னைகளால் ஏற்படும் இறப்புகளே அதிகம் உள்ளன. இனி, டீ கடைகளுக்குச் சென்றால் கூச்சப்படாமல், மாஸ்டர் கிளாஸில் டீ கொடுங்கள், டபரா செட்டில் காபி கொடுங்கள் என்று கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்.
காகிதக் கோப்பைகளை தயாரிப்பதற்கு என்று சில வழிமுறைகள் உண்டு. மெழுகு அடுக்கின் தடிமன் குறைவாக இருக்க வேண்டும் மற்றும் தண்ணீரில் ஊறவைக்கும் போது எந்த நச்சுத் திரவத்தையும் வெளியிடக்கூடாது போன்ற வழிமுறைகளை அரசு வகுத்துள்ளது. இருப்பினும், உற்பத்தியாளர்கள் அதை கண்டுகொள்வது கிடையாது. அதனால் முடிந்தவரை அடிக்கடி வெளியிடங்களுக்குச் செல்பவர்கள், தங்கள் கையிலே ஒரு எவர்சில்வர் கோப்பையை எடுத்துக்கொள்வது நல்லது. அதேநேரம், ஆபத்தான பேப்பர் கப்களுக்கு மாற்றாக, உடல் நலத்துக்கு ஆபத்து விளைவிக்காத, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கப்புகளை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry