திமுக காண்பது பகல் கனவா? 75% வாக்குகளில் திமுக, அதிமுக-வுக்கு எவ்வளவு கிடைக்கும்? VELS VIEW!

0
31

வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் திமுக இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. திமுகவின் வெற்றி எளிதில் சாத்தியப்படாது என்ற நிலையில், திமுக வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ள கட்சி எது என்பதை பார்க்கலாம்

திமுக கூட்டணியில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில், ‘கூடா நட்பு கேடாய் முடியும்என கருணாநியால் வர்ணிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில், வழக்கம்போல கோஷ்டி குஸ்தி அனல்பறக்கிறது. அதேநேரம், மக்கள் நலக்கூட்டணியை அமைத்து, மு.. ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் அமர விடாமல் தடுத்த, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக ஆகிய கட்சிகள் தற்போது திமுக அணியில் உள்ளன.

கைகொடுக்குமா கூட்டணி?

அந்தக் கட்சிகள் திமுகவுக்கு இழைத்த துரோகத்தையும், அந்தக் கட்சித் தலைவர்கள் திமுக மீது வைத்த கடுமையான விமர்சனத்தையும் திமுக தொண்டர்கள் மறக்கத் தயாராக இல்லை. திமுகவில் கிளை செயலாளருக்கு இருக்கும் அறிவுகூட ஸ்டாலினுக்கு இல்லை என விமர்சித்தவர்தான் வைகோ.

“உலகத் தமிழினத்தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல்காலத் தமிழர் கலைஞர், மக்களின் கோபத்தை எதிர்கொள்ளப் பயந்து, மருத்துவமனையில் போய் ஒளிந்து கொண்டு உள்ளார்.தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காகச் சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்தச் சூரப்புலி, உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்தது என்ன?” என்று கேட்டார் வைகோ.

ஆதாரம் : ஈழத்தமிழர் படுகொலை! கருணாநிதியின் துரோகம்! வரலாறு மன்னிக்காது!

இந்தியா தங்களது நாடு என்று சொந்தம் கொண்டாட இஸ்லாமியர்களுக்கு உரிமை உண்டுஎனப் பேசி இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு மதமோதலுக்கு வழிவகுக்கும் திருமாவளவன்,  தேவையில்லாமல் ஜெயலலிதா மீது பொய்யான புகார்களைக்கூறி வருகிறார் முதல்வர் கருணாநிதி. பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள முரசொலி அலுவலகம்அரசுநிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயம் ஆகியவை குறித்து கருணாநிதி வாய் திறக்காமல் மெளனமாக இருப்பது ஏன் என்பதை அவர் விளக்க வேண்டும்என்று கேட்டிருந்தார்.

டிடிவி, சீமான், கமல் ஃபேக்டர்

இந்நிலையில், இந்து மதப்பற்றாளர்களின் வாக்குகளை முற்றுமுதலாக இழந்துள்ளது திமுக கூட்டணி. ..கூ. தலைவர்களின் விமர்சனங்களை மறந்ததாக திமுக தலைவர்கள் காட்டிக் கொண்டாலும், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் மனமொத்து தேர்தல் வேலை செய்வார்களா? என்பது சந்தேகமே.   

இந்து மதப் பற்றாளர்களின் வாக்குகளை திமுக இழப்பதைப் போல, இஸ்லாமியர்கள், கிறித்துவர்களின் வாக்குகளை அதிமுக கூட்டணி இழக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க, டி.டி.வி.தினகரன், சீமான், கமல் ஆகியோரின் கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளே, 2021-ல் யார் முதல்வர் என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கும். அந்த அளவுக்கு, இந்த மூன்று கட்சிகளும், கணிசமான வாக்கு வங்கியோடு வளர்ந்திருக்கின்றன. ஏனெனில், 2019 மக்களவைத் தேர்தலில் அ..மு.. பெற்ற வாக்குகள் 5.13%. நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் 3.93%. .நீ.. 3.77% வாக்குகளை பெற்றது. மொத்தமாக ஏறக்குறைய 13 சதவிகிதம் வாக்குகள்

நாடாளுமன்றத் தேர்தலிலேயே 13 சதவிகித வாக்குகளை இந்தக் கட்சிகள் பெற்றன. தற்போது நடக்க இருப்பதோ சட்டமன்றத் தேர்தல். நாம் தமிழர் கட்சி தவிர அமமுக, மநீம கட்சிகள் கூட்டணியோடு தேர்தல் களம் காண்கின்றன. எனவே இந்தக் கட்சிகள் பதிவாகும் வாக்குளில் 25 சதவிகிதத்தை பெற வாய்ப்புள்ளது. இவற்றில், அமமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிகவும் அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் பிரிக்கப்போவது அதிகபட்சம் திமுகவாக்குகளாகவே இருக்கும்

திமுக மீது மக்களுக்கு பயம்?

அதிமுக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி இல்லாத நிலையில், திமுக வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது. கடந்த 2016 தேர்தலில் சுமார் 1.31% வித்தியாசத்தில்தான் தி.மு.. ஆட்சி அதிகாரத்தை இழந்தது. தற்போதும் அதேபோன்றதொரு நிலைதான் உள்ளது. ஏனென்றால், ஸ்டாலினுக்கு நிகரான தலைவராக எடப்பாடி பழனிசாமி வளர்ந்து நிற்கிறார். இந்தத் தேர்தல் திமுக, அதிமுக என்பதைத் தாண்டி ஸ்டாலின் வேண்டுமா?, எடப்பாடி வேண்டுமா? என்பதாகத்தான் இருக்கிறது. திமுக நிர்வாகிகள் மீதான மக்களின் பயம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருக்கிறது.

திமுக தேர்தல் வரலாறு

இந்த நேரத்தில் திமுகவின் பழைய வரலாற்றையும் சற்று திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. 1967, 1971, 1989, 1996 ஆகிய தேர்தலில் மட்டும்தான் திமுக மூன்றிலக்க இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவை தொடங்கி 1957 தேர்தலில் வென்ற C.N. அண்ணாதுரையே (காஞ்சீவரம் நடராசன் முதலியார் அண்ணாதுரை) 1962, 1967 தேர்தலில் தோல்வியை தழுவினார். 67-ல் மேல்சபை உறுப்பினராக தேர்வாகித்தான் அவரால் முதலமைச்சராக முடிந்தது. 1969, பிப்ரவரி 3-ல் அவர் மறைந்தார், 2 ஆண்டுகள் மட்டுமே அவர் முதலமைச்சராக இருந்தார்.

எடப்பாடியா? ஸ்டாலினா?

இதையெல்லாம் பார்க்கும்போது, 1957 முதலே திமுகவுக்கு தேர்தல் அரசியல் அவ்வளவு எளிதாக இருந்திருக்கவில்லை. எனவே இந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஒவ்வொரு கட்சியின் சின்னச் சின்ன அசைவுகளும்கூட வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக்கூடியவைதான். டி.டி.வி.தினகரன், சீமான், கமல் ஆகியோரின் கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளே, 2021-ல் யார் முதலமைச்சர் என்பதைத் தீர்மானிக்கும். முக்கிய கட்சிகளின் புரிதல்களை உடைப்பதாகவே பல நேரங்களில் மக்கள் கணக்கு இருந்திருக்கிறது. எனவே பதிவாகும் வாக்குளில் 25 சதவிகிதத்தை அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சிகள் பிரிக்க, எஞ்சிய 75% வாக்குகளில், பெரும்பான்மையைப் பெறப்போவது எடப்பாடியா?, ஸ்டாலினா?

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry