உங்க ஏ.சி. ரூம்ல இது இல்லையா? மூக்கடைப்பு, தலைவலி, சைனஸ், கண் எரிச்சலுக்கு இதுவும் காரணமா இருக்கலாம்! ஏன் தெரியுமா..?

0
125
Is a humidifier necessary when using air conditioning? Learn why AC can dry out the air and how a humidifier can help with comfort and well-being.

வெயில் நிறைந்த கோடை காலத்தில் வீட்டிற்கு வந்தவுடன் ஏர் கண்டிஷனரை(AC) ஆன் செய்து விட்டு படுத்துக்கொள்ளும் சுகமே தனிதான். ஆனால் அப்படி ஏசியை ஆன் செய்த சில நிமிடங்களிலேயே மூக்கடைப்பு, தும்மல் அல்லது தொண்டையில் அரிப்பு போன்ற அறிகுறிகளை பலரும் அனுபவித்திருப்பீர்கள்.

அறைக்குள் உள்ள ஈரப்பதத்தை குறைப்பதன் மூலமாக ஏர் கண்டிஷனர் வேலை செய்கிறது. இது சுற்றுச்சூழலை மிக விரைவாக வறண்டு போக செய்கிறது. இந்த வறட்சியினால் மூக்கடைப்பு, வறண்ட தொண்டை, இருமல், சரும எரிச்சல் மற்றும் உலர்ந்த உதடுகள் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது.

Also Read : ஏ.சி. அறையில் ஜம்முனு தூங்குற ஆளா? இந்த 6 பிரச்னைகள் வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க..!

மேலும், ஏர் கண்டிஷனர்கள் அறையை குளுமையாக்க உதவும் அதே சமயத்தில், அவை காற்றில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி விடுகின்றன. இதனால் நம்முடைய மூக்கு, தொண்டை மற்றும் தோல் ஆகியவை வறண்டு போகிறது. இந்த இடத்தில்தான் நமக்கு ஹியூமிடிஃபையர்(Humidifier) அல்லது ஈரப்பதமூட்டிகள் உதவுகிறது. ஈரப்பதத்தின் அளவு, இருப்பிடம் மற்றும் பருவங்களுக்கு ஏற்ப இயற்கையாகவே மாறுபடும்.

ஏர் கண்டிஷனர் செய்யப்பட்ட அறைக்குள் இருக்கும் பலருக்கு தலைவலி, மோசமான அலர்ஜி மற்றும் மூச்சு விடுவதில் சிக்கல்களை அனுபவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஏசி யூனிட்டுகளை வழக்கமான முறையில் சுத்தம் செய்யாவிட்டால் இந்த பிரச்சனைகள் மோசமாகும். ஏசி யூனிட்டுகளில் உள்ள தூசு, மாசு, மகரந்தங்கள், கொசு மருந்துகள் போன்றவை எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் சுவாச பாதைகள் வீக்கம் அடைந்து அலர்ஜி உருவாகிறது.

Using AC? You might need a humidifier! Learn why air conditioners reduce humidity and how a humidifier can alleviate dryness, benefiting your skin and respiratory system.

உங்கள் தூக்கச் சூழலைப் பொறுத்தவரை, சரியான ஈரப்பத அளவை உறுதி செய்வதும் முக்கியம். அறை வெப்பநிலையை 23 டிகிரி செல்சியஸுக்கு வைத்து, ஈரப்பத அளவுகளை பேலன்ஸ் செய்வதற்கு ஹியூமிடிஃபையர்கள் பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதனால் வீட்டுக்குள் மாசுபாடு குறைந்து, இயற்கையான முறையில் ஈரப்பதம் கிடைக்கும்.

நாம் ஏ.சி. அறையை தொடர்ந்து உபயோகப்படுத்தும் நிலையில், ஹியூமிடிஃபையர் வாங்கிக்கொள்வது நல்லது. அடிப்படை மாடலே போதுமானது. இதனால் சைனஸ் தொந்தரவு அதிகரிக்காது என்பதுடன் தோல், உதடுகள் மற்றும் மயிர் கால்கள் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உங்களுக்கு எந்த விதமான அலர்ஜியும் ஏற்படாது.

Also Read : ஏ.சி.யால் அதிகரிக்கும் மின் கட்டணம்! குறைப்பதற்கான ஈஸி டிப்ஸ்!

ஹியூமிடிஃபையர் என்பது ஆஸ்துமா, COPD(Chronic Obstructive Pulmonary Disease – நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்), சைனஸ் பிரச்சினைகள் மற்றும் பிற அலர்ஜிகளால் ஏற்படும் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவும். சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் ஹியூமிடிஃபையர் பராமரிக்கிறது.

வீட்டிற்குள் இருக்கும் காற்றில் தொடர்ந்து ஈரப்பதத்தை தக்க வைப்பதன் மூலமாக சருமத்தில் ஏற்படும் எரிச்சல், சிவத்தல் மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறிகளை இது தடுக்கிறது. ஹியூமிடிஃபையர் சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்திருப்பதால், வறட்சியையும், எரிச்சலையும் தடுக்கிறது. மேலும் உதடுகள் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்கிறது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அப்படியே திறந்து வைப்பது, ஹியூமிடிஃபையர் அல்லது ஒரு சிறிய நீரூற்று போன்றவை காற்றின் ஈரப்பத அளவுகளை மேம்படுத்த உதவும்.

Explore the pros and cons of using a humidifier in an air-conditioned space. Find out how it can combat dryness and improve air quality for a healthier environment.

ஏர் கண்டிஷனர் நம்மை குளுமையாக வைப்பதற்கு உதவினாலும், அதே சமயத்தில் காற்றின் ஈரப்பதத்தை பராமரிப்பதும் நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மிகவும் அவசியம். ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி வறட்சி அல்லது சுவாச அசௌகரியம் ஏற்பட்டால் ஹியூமிடிஃபையர் உங்களுக்கு தீர்வாக இருக்கும்.

Evaporative Humidifiers, Ultrasonic Humidifiers, Warm Mist Humidifiers என மூன்று வகையான ஹியூமிடிஃபையர்கள் கிடைக்கின்றன. உங்கள் அறையின் அளவைப் பொறுத்து எந்த மாடல் பொருந்தும், அதன் நன்மை தீமைகள் என்ன, விலை வரம்பு போன்றவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப வாங்கிக்கொள்ளலாம்.

ஈரப்பதமூட்டிகள் அல்லது ஹியூமிடிஃபையர் என்பது ஒரு சிகிச்சை முறை அல்ல. ஒரு குறிப்பிட்ட நிலையில் அது உங்களுக்கு உதவக்கூடும். அதேநேரம் மேலே சொன்ன பிரச்சினைகளை சரியாக அணுகுகிறீர்களா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry