ஏ.சி. அறையில் ஜம்முனு தூங்குற ஆளா? இந்த 6 பிரச்னைகள் வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க..!

0
286
Nowadays, air conditioners have become an unavoidable item not only in offices but in homes too. However, if not used properly, spending too much time in air-conditioned spaces could cause many health issues | Getty Image.

அத்தியாவசியப் பொருட்கள் வரிசையில் இப்போது ஏ.சி.யும் இணைந்துவிட்டது. கோடைக்காலம் என்றில்லாமல், வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் வீடுகளில் ஏ.சி. பயன்படுத்தப்படுகிறது. அலுவலகங்களில் வருடம் முழுவதும் ஏ.சி. பயன்பாடு உள்ளது. இந்த நவீன வசதிகள் பல தீமைகளை ஏற்படுத்துகின்றன. ஏசி அறையில் அதிகம் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். அதிலும் குறிப்பாக, ஏசி போட்டுக் கொண்டு தூங்குவதால் நமது உடலில் 6 விதமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

சுவாசப் பிரச்சனை

ஏசி அறையில் படுத்து உறங்குவதால் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக குளிர் காற்று ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும், ஏற்கனவே ஆஸ்துமா அல்லது அலர்ஜி போன்ற சுவாசப் பிரச்சனை உடையவர்களுக்கும் இதன் பாதிப்பு அதிகம். ஏசியிலிருந்து வெளிவரும் குளிர் காற்று நமது சுவாசப் பாதையை எரிச்சல்படுத்தி இருமல், மூச்சிறைப்பு, நெஞ்சடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

கண் மற்றும் சரும வறட்சி

ஏசி அறையில் தூங்கும் போது, அந்த அறையின் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் நம் கண்களும், சருமமும் வறண்டு போகும். நீண்ட நேரம் நம் உடலில் குளிர் காற்று படுவதால் கண்கள் எரிச்சலாகி கண் அரிப்பு, சிவந்து போதல், மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகளை அதிகப்படுத்தும்.

Also Read : பூசணி விதைகளில் மூழ்கிக் கிடக்கும் மருத்துவ மகிமை! ஆச்சரியம்… ஆனால் உண்மை..! வயாகரால்லாம் பக்கத்துலயே நிக்காது..!

தசை இறுக்கம் மற்றும் வலி

ஏசி அறையில் உறங்குவதால் தசைகளில் இறுக்கமும், மூட்டுகளில் வலியும் ஏற்படுகிறது. குளிர்ந்தநிலை, தசைகளை மரத்துபோகச் செய்கின்றது. மேலும் கீல்வாதம் அல்லது தசைக்கட்டு கோளாறு உடையவர்களுக்கு குளிர் காற்றின் காரணமாக மூட்டு வலி அதிகரிக்கும். இதைக் குறைக்க தூங்கும் போது போர்வைகளால் உடலை மூடிக் கொள்ளலாம். அதோடு தூங்கும் முன்பு உடலை நீட்டி வளைக்கும் பயிற்சிகளை செய்து தளர்வை கொடுக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும்

ஏசி அறையில் படுத்து உறங்குவதால் சுவாசத் தொற்றுகள் வரும் ஆபத்து அதிகரிக்கும். ஏனென்றால் குளிர் காற்று உடலின் நோய் எதிர்பு சக்தியை பலவீனப்படுத்தி எளிதில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள் பரவுவதற்குக் காரணமாக அமைகிறது. மேலும் குளிர்ச்சியான வெப்பநிலையில் நீண்ட நேரம் இருப்பதால் மேல் சுவாசப் பாதையில் உள்ள ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்படுகிறது. இதனால் ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ்களை தடுக்கும் சக்தி உடலில் குறைந்து போகிறது.

Also Read : உங்களுக்கேற்ற சரியான குளியல் சோப்பை தேர்வு செய்வதற்கான ரகசியம்! Your Bath Soap Guide!

தூக்கத்தைக் கெடுக்கிறது

ஏசி அறையில் படுக்கும் போது நாம் தூங்கும் முறையில் இடைஞ்சல்கள் ஏற்பட்டு தூக்கம் பாதிக்கப்படுகிறது. ஏசியின் வெப்பநிலையை மிகவும் குறைவாக வைத்திருந்தாலோ அல்லது ஏசியிலிருந்து வரும் ஓசையின் காரணமாகவோ உங்கள் தூக்கம் பாழாகிறது. குளிர் அதிகமானால் நடு இரவில் முழித்துக்கொள்ளும் சூழலும் ஏற்படுகிறது.

அலர்ஜியை அதிகப்படுத்தும்

ஏசி இயந்திரத்தை ஒழுங்காக பராமரிக்காவிட்டால் அறை முழுவதும் தூசிகள், அழுக்குகள், பொடுகுகள் ஆகியவற்றை பரவச்செய்யும். இது சில நபர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும் ஏசி இயங்கும் அறையில் குளிர்ச்சியான வெப்பநிலை இருப்பதால் அங்கு ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். இதனால் ஒவ்வாமை மற்றும் காற்று மாசுபடுத்திகள் அறையில் சேகரமாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இது தும்மல், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். இதைப் போக்க ஏசியில் HEPA ஃபில்ட்ரை பயன்படுத்தலாம். ஏசி காற்றில் உள்ள ரசாயனங்கள் காரணமாக தலைவலி ஏற்படலாம். சில ஆய்வுகளின் படி ஏசி அறையில் அதிகம் தூங்குவது இதய நோய்கள் ஏற்படுத்துவதற்கான காரணிகளை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

ஏ.சி.யை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்துகொண்ட அதேநேரத்தில், அறைக்கு ஏற்ற ஏர் கண்டிஷனரைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியமானது. சந்தையில் பல்வேறு மாடல்கள், அளவுகள் மற்றும் அம்சங்களுடன் ஏசி-க்கள் வருவதால், அதில் சரியானதைத் தேர்ந்தெடுப்பது சற்றே கடினம்தான்.

நீங்கள் எத்தனை டன்  ஏசி வாங்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது உங்கள் அறையின் அளவு தான். அறையின் நீளம் மற்றும் அகலத்தை கணக்கிட்டு சதுர அடியை கண்டுபிடிங்கள். உதாரணத்திற்கு 12 அடி நீளமும், 10 அடி அகலமும் இருந்தால் உங்கள் அறையின் சதுர அடி 120. எனவே 120 சதுர அடிக்கு எந்த ஏசி போதுமானது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  • Up to 100 square feet – 0.8 ton
  • Up to 150 square feet – 1 ton
  • Up to 250 square feet – 1.5 ton
  • Up to 400 square feet – 2 ton

ஏசியின் குளிரூட்டும் திறன் BTU என்ற அலகுகளில் அளவிடப்படுகிறது. இது ஏசி எவ்வளவு வெப்பத்தை அறையில் இருந்து வெளியேற்றும் என்பதைக் குறிப்பதாகும். உங்கள் அறையின் சதுர அடியை 20 ஆல் பெருக்கும்போது, எவ்வளவு BTU வருகிறது எனப் பாருங்கள். இந்த அளவுக்கு திறன் கொண்ட ஏசியைத் தேர்ந்தெடுங்கள்.

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு ஆற்றல் திறன் வாய்ந்த ஏசியை தேர்வு செய்வது அவசியம். எளிமையாக புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஸ்டார் ரேட்டிங் அடிப்படையில் இதைக் குறிப்பிடுவார்கள். அதாவது 3 ஸ்டார் ஏசியை விட 5 ஸ்டார் ஏசியில் மின்சாரக் கட்டணம் குறைவாக வரும். மேலும் இது சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக கருதப்படுகிறது.

Also Read : ஏ.சி.யால் அதிகரிக்கும் மின் கட்டணம்! குறைப்பதற்கான ஈஸி டிப்ஸ்!

இப்போது வரும் ஏசி-களில் அதிகப்படியான கூடுதல் அம்சங்கள் கொடுக்கப்படுகின்றன. சரி செய்யக்கூடிய ஃபேன் வேகம், டைமர்கள், ஸ்லீப் மோட், திறன் வாய்ந்த ஃபில்டர்கள் மற்றும் குறைந்த இரைச்சல் தொழில்நுட்பம் போன்ற அனைத்தையும் கவனியுங்கள். இதில் எது உங்களுக்கு முக்கியமானது என்பதைப் பார்த்து ஏசியைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் எவ்வளவு விலையில் ஏசி வாங்கப் போகிறீர்கள் என்ற பட்ஜெட்டை தீர்மானித்து அந்த வரம்பிற்குள் இருக்கும் ஏசி வகைகளைத் தேடுங்கள். அதிக விலை கொண்ட ஏசி தரமாகவும், மேம்பட்ட அம்சங்களுடன் இருக்கும். உங்களது விலைக்கு ஏற்ற வகையில் உள்ள தரமான ஏசியைத் தேர்ந்தெடுக்கவும். ஏனெனில் இதில் ஒருமுறைதான் முதலீடு செய்யப் போகிறீர்கள், தரமற்ற ஏசியை வாங்கி, அவ்வப்போது பழுதானால் அதற்கான செலவுகள் அதிகரிக்கும் என்பதால், தொடக்கத்திலேயே தரமான ஏசி வாங்குவது நல்லது.

அதேபோல், ஏசி வெப்பநிலையை 24-25 டிகிரி செல்சியஸில் பராமரிப்பது நல்லது. ஏனெனில் இது ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மிகக் குறைந்த வெப்பநிலையில் உள்ள ஏசி அறைகளுக்குள், குறைந்த ஈரப்பதம் காரணமாக தோல் சேதம் அதிகரிக்கும். இதன் விளைவாகக் குறையும் வியர்வை உற்பத்தியை ஈடுசெய்ய தோல் திசு அதிகப்படியான எண்ணெயை சுரக்கும். இது தோல் கறைகள், முகப்பரு, முன்கூட்டிய சுருக்கங்கள் மற்றும் தோல் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry