பிஸ்கட் சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை! Daily Biscuit Consumption: Side Effects and Health Risks!

0
219
Eating biscuits daily, especially those high in sugar and refined flour, may contribute to weight gain and potential health issues like increased blood sugar levels. Additionally, excessive consumption of processed snacks may impact dental health and provide empty calories without essential nutrients.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிஸ்கட்களை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது உண்டு. அதிலும் குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது  உங்களுக்கு தெரியுமா?

பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் பாமாயில், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும் டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு.

பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம்.

Also Read : குக்கீஸ் சாப்பிட்டால் சர்க்கரை நோய், கேன்சர் வரக்கூடும்! எச்சரிக்கும் ஆய்வு ரிப்போர்ட்! Vels Exclusive

பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிக புரதச் சத்துகளைக் கொண்டது.

மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம். சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்சினைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு, பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும். கெட்ட கொழுப்பு உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் அளவு பூஜ்ஜியம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.

லோ இன் கலோரிஸ் என்று பல பிஸ்கட் பக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டை லோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு. பிஸ்கட்டை நொறுக்குதீனியாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானlல்ல. காலை உணவாக தேநீர், பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

பிஸ்கட் பொதுவாக மாவு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள், அதிக சோடியம், சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இவற்றை உண்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், ஏனெனில் இவற்றின் ருசிக்கு பழகிய பலர் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்கின்றனர். இதன் விளைவாக, எடை கணிசமாக அதிகரிக்கிறது. அவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் உப்பு நமது ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது.

Also Read : உங்க இதயம் ஆரோக்கியமாக இருக்குதா? வீட்டிலேயே இந்த சோதனைகளை செய்து பாருங்க!

அளவுக்கு அதிகமாக மைதா மாவு சாப்பிட்டால் நமது செரிமான மண்டலம் பாதிக்கப்படும். பிஸ்கட்டில், நார்ச்சத்து என்பது முற்றிலும் கிடையாது. எனவே பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அளவுக்கு அதிகமாக பிஸ்கட்டுகளை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வாயு பிரச்சனை, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

பொதுவாக நாம் சாக்லேட் சாப்பிடுவது தான், பல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று நினைப்போம். ஆனால் அளவுக்கு அதிகமான பிஸ்கட்டும் பல் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஏனெனில் அளவிற்கு அதிகமான சர்க்கரை காரணமாக பல் சொத்தை பிரச்சனை ஏற்படும். அதோடு அளவிற்கு அதிகமான சர்க்கரை, உடலில் இருக்கும் கால்சியம் சத்தை உறிஞ்சி, பற்களையும் எலும்புகளையும் பலவினப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக் காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பிஸ்கட்டில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளன, அவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், உடல் பருமன் டைப் 2 நீரிழிவு நோயையும் ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. எனவே, பிஸ்கெட்கள் அதிக அளவில் சாப்பிடுவதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து உடலில் கிடைக்காமல் போய்விடும். இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கும்.

பிஸ்கட்டில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை மட்டுமே அதிகம் உள்ளதால், அதில் கலோரிகளும் மிகவும் அதிகம். இதனால் குழந்தைகள் மத்தியில் உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கிறது. உடல் பருமன் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிறுவயதிலேயே பலவிதமான நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே குழந்தைகளுக்கு அளவிற்கு அதிகமாக பிஸ்கட் கொடுக்க கூடாது என்பதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் கோதுமை மாவை பதப்படுத்தி பிஸ்கட் தயாரிப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிஸ்கட் தயாரிக்க அதிக அளவிலான சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. எனவே பிஸ்கட் அதிகமாக சாப்பிடுவதால் சர்க்கரை நோய், பல் பிரச்சனைகள், ஏற்படும்.

  • பிஸ்கட்டில் எந்த சத்துக்களும் இல்லை. பிஸ்கட்டில் நார்ச்சத்து மிகக் குறைவு. அவற்றை அதிகமாக சாப்பிட்டால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • பிஸ்கட்டில் தண்ணீரின் சதவீதமும் குறைவாக உள்ளது. இதனால் பிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் உடல் வறட்சி அடையும்.
  • பிஸ்கட் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து, ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் குறைகிறது.
  • அளவுக்கு அதிகமாக பிஸ்கட் சாப்பிடுபவர்கள் இதய நோய் அபாயத்திலும் சிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பிஸ்கட் சாப்பிட விரும்புபவர்கள் அவற்றால் ஏற்படும் உடல்நலக்குறைவை மனதில் வைத்து பிஸ்கட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு பாக்கெட் பிஸ்கட்டை ஒரே சமயத்தில் காலி செய்யாமல், ஒரு சில பிஸ்கட்களை மட்டுமே சாப்பிட்டலாம். அதுமட்டுமல்லாமல் தினமும் பிஸ்கட்டை ஸ்நாக்ஸாகச் சாப்பிடுவதை கைவிடுவதும் நல்லது.

Image Source : Getty Image.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry