ஈவெரா சிலைக்கு மங்க்கி குல்லா, காவி சால்வை! ஒரத்தநாடு போலீசுக்கு தலைவலி ஏற்படுத்திய மர்மநபர்கள்!

0
33

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள ஈ.வெ. ராமசாமி சிலைக்கு மர்மநபர் காவி சால்வை போர்த்தி தலையில் குல்லா வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் உறுப்பு கல்லூரி எதிரே பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஈ.வெ. ராமசாமி சிலைக்கு, காவி நிறத்தில் பொம்மை படம் போட்ட சால்வை அணிவித்து தலையில் மங்கி குல்லா வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை அந்த வழியே நடைபயிற்சிக்கு சென்றவர்கள் இதனைக்கண்டு உடனடியாக அப்புறப்படுத்தி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதுதொடர்பாக அந்த பகுதியில் சுற்றி திரிந்து கொண்டும், பெரியார் சிலைக்கு கீழே நின்று கொண்டும் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது, அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் செயலாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி மற்றும் அருகில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து மனநலம் பாதிக்கப்பட்டவர் தான் செய்தாரா அல்லது வேறு ஏதேனும் மர்மநபர்கள் செய்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை திராவிடர் கழகத்தினர் புகார் எதுவும் கொடுக்கவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry