மோசமான தொற்று பரவலை ஏற்படுத்தும் ஒமைக்ரான்! எந்த ஒரு வைரஸையும் விட ஒமைக்ரான் வேகமாக பரவுவதாக பில்கேட்ஸ் எச்சரிக்கை!

0
47

ஒமைக்ரான் தொற்றால் ஒரு மோசமான மிக மோசமான தொற்று பரவலுக்குள் சர்வதேச நாடுகள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26ம் தேதி கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ், உலகளவில் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. ஒமைக்ரானுக்கு அஞ்சி, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு தடையும், பல்வேறு கடும் கட்டுப்பாடுகளையும் பல நாடுகள் விதித்துள்ளன. இருப்பினும், பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகை ஆட்டிப்படைக்கும் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வரலாற்றில் எந்த ஒரு வைரஸையும் விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது விரைவில் உலகின் அனைத்து நாட்டிலும் பரவும் ஆபத்து உள்ளது.

ஒமைக்ரான் உங்களை எப்படி தாக்குகிறது என்பது பெரிதாக தெரியாது. இது டெல்டாவை விட பாதியாக இருந்தாலும், இதுவரை நாம் பார்த்த மிக மோசமான பாதிப்பாக இது இருக்கும், ஏனெனில் இது மிகவும் வேகமாக தொற்றும் தன்மை கொண்டது.

வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தோன்றியபோது, நாம் தொற்றுநோயின் மோசமான பகுதிக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரான் நம் அனைவரது வீட்டிற்கு வரும். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் வீட்டில் இப்போது அது உள்ளது. இதனால் எனது கிறிஸ்துமஸ் விடுமுறை திட்டங்களை ரத்து செய்துவிட்டேன்.

இங்கே ஒரு நல்ல செய்தி ஒன்று இருந்தால் அது இதுதான். ஒமைக்ரான் மிக விரைவாக கடந்து செல்லும் என்பது தான் அது. ஒரு நாட்டில் ஒமைக்ரான் புகுந்தால், அது அங்கு 3 மாதங்களுக்கும் குறைவாக நீடிக்கும். அந்த சில மாதங்கள் மோசமாக இருக்கலாம், ஆனால் நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், தொற்றுநோய் 2022 இல் முடிவுக்கு வரும் என்று நான் இன்னும் நம்புகிறேன்” இவ்வாறு பில்கேஸ் பதிவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry