
ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக ரோஜா தினம் என்பது புற்றுநோயாளிகளின் நலனுக்கான தினமாகும். புற்றுநோயால் இறந்த 12 வயது கனடியரான மெலிண்டா ரோஸின் நினைவாகவே ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது.
ரோஜா தினத்தன்று மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், புற்றுநோய் நோயாளிகளுக்கு உரைகள், பரிசுகள் மற்றும் மலர்களை அனுப்புகிறார்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், உடல் அழுத்தத்துடன், கூடுதலாக உளவியல் அழுத்தத்தையும் சந்திக்கிறார்கள். ரோஜா தினம் மூலம் கெளரவிப்பது, அவர்களிடம் குறிப்பிடத்தக்க நல்லதொரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.
ரோஜா தினம் என்றால் என்ன?
புற்றுநோய் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் வாட்டி வதைக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் நோயின் மன மற்றும் உளவியல் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கு மன உறுதியைக் கொண்டிருக்க வேண்டும். அஸ்கின் கட்டி கண்டறியப்பட்ட 12 வயது கனடிய சிறுமியான மெலிண்டா ரோஸின் நினைவாக, புற்றுநோய் நோயாளிகளுக்கான உலக ரோஜா தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆஸ்கின் கட்டி என்பது இரத்தப் புற்றுநோயின் ஒரு அசாதாரண வடிவம். 1994 ஏப்ரல் மாதம், ஆஸ்கின் கட்டியால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியான மெலிண்டா ரோஸ் சில வாரங்களுக்கு மேல் வாழ முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் கணித்தனர். எனவே பெற்றோரின் சம்மதத்தோடு சிகிச்சையையும் அவர்கள் நிறுத்திவிட்டனர்.
இருந்தபோதிலும், அவளுடைய அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் காரணமாக, அவள் மேலும் ஆறு மாதங்கள் உயிரோடு இருந்தாள். அந்த ஆறு மாதங்களை, 12 வயது சிறுமியான மெலிண்டா ரோஸ், மற்ற புற்றுநோயாளிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக, கவிதைகள், கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்புவதில் செலவிட்டார்.
புற்றுநோயை எதிர்த்துப் போராடுவோருக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு மிக முக்கியமான ஒன்றாகும். கடினமான காலங்களில், புற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, அவர்களுக்குத் தேவையான கவனிப்பையும் ஆதரவையும் நமது அன்புக்குரியவர்களுக்கு வழங்குவது அவசியம்.
சென்னையில், வடபழனியில் விஜயா ஹெல்த் சென்டர் வளாகத்தில் இயங்கும், பேட்டர்சன் கேன்சர் மையம் ஆண்டுதோறும் செப்டம்பர் 22ந் தேதி ரோஸ் தினத்தை அனுசரிக்கிறது. நடப்பாண்டுக்கான விழா, கோடம்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கம்யூனிட்டி ஹால், காமராஜர் காலனி, டாக்டர் சுப்பராய நகரில் நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு விழா தொடங்குகிறது.
புற்றுநோய் என்பது நோயல்ல, அது ஒரு குறைபாடு என்று அழுத்தமாகக் கூறிவரும் பேட்டர்சன் கேன்சர் மைய மேலாண் இயக்குநர் மூத்த மருத்துவர் விஜயராகவன், நோயாளிகளிடையே தைரியத்தையும், நம்பிக்கையையும் விதமாக, புற்றுநோய் ஒழிப்பு அறக்கட்டளையுடன் (Cancer ALleviation Foundation – CALF) இணைந்து கோஜா தின நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்துள்ளார். தன்னார்வலர்கள், சிகிச்சை பெறுவோர், அவர்களது உதவியாளர்கள் காலை 8.30 மணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேட்டர்சன் கேன்சர் மையத்தின்(Paterson Cancer Center – PCC) மேலாண் இயக்குநரும், புற்றுநோயியல் மூத்த மருத்துவ நிபுணருமான விஜயராகவன் தலைமையிலான இந்த விழாவில், அகில இந்திய சுந்தரப்போராட்ட வீரர்கள் அமைப்பின் இயக்குநர் குருமூர்த்தி, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி மூத்த துணைத் தலைவர் கிருஷ்ணசுவாமி குள்ளி, பிரபல நடிகர் மதன் பாப், புற்றுநோயியல் மருத்துவர் மதன் மோகன், காவல்துறை முன்னாள் எஸ்.பி., கலியமூர்த்தி, விஜய்’ஸ் நர்சிங் ஹோம் மேலாண் இயக்குநர் டாக்டர் குமரவேல், தொழில் முனைவோர் வெங்கட்ராமன் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.
புற்றுநோய் கட்டிகளை துவக்க கட்டத்தில் கண்டறிந்து விட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம். இதன் அடிப்படையில் மூத்த மருத்துவர் விஜயராகவன் நிறுவியுள்ள பேட்டர்சன் புற்றுநோய் மையம், ஒவ்வொரு ஆண்டும் இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry