மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள வாழை திரைப்படம் வெளியாகி பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில், இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார். 1999ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற லாரி விபத்தை மையமாக வைத்து வாழை திரைப்படத்தை இயக்குநர் மாரிசெல்வராஜ் உருவாக்கியுள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சோ.தர்மன், சினிமாவுக்கு வந்ததால் வாழை கதை தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை எழுதியதை நினைத்து தற்போது மகிழ்ச்சி அடைகிறேன். வாழை தன்னை வாழ வைக்கவில்லை என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
வாழை திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகள் அனைத்தும் “நீர்ப்பலி” எனும் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றிருப்பதாகவும், வாழை திரைப்படத்தின் கதையை தான் ஏற்கெனவே சிறுகதையாக எழுதி விட்டதாகவும், அதை படமாக எடுக்க யாரும் தன்னிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான சோ.தர்மன் வேதனையுடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் திரைப்படங்கள் பெரிதாக பார்ப்பதில்லை. ஆனால் என்னுடைய நெருங்கிய எழுத்தாளர்கள் வாழை திரைப்படம் பார்த்தீர்களா? என்று கேட்டார்கள். நான் எழுதிய நீர்ப்பழி சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதையை படமாக்கி உள்ளார்கள் என அவர்கள் தெரிவித்தார்கள்.
பின்னர் வாழை திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழை திரைப்படத்தை சிறுகதையாக எழுதியுள்ளேன். என்னுடைய சிறுகதைக்கு பெயர் வாழையடி… என்று இருக்கும். ஏன் வாழையடி என பெயர்வைத்து மூன்று புள்ளிகளை வைத்தேன் என்றால், வாழையடி வாழையாக குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை குறிப்பிடத்தான் அப்படி பயன்படுத்தி இருந்தேன்.
நான் அச்சு ஊடகத்தில் எழுதிய கதையைத்தான் தற்போது மாரி செல்வராஜ் காட்சி ஊடகத்தில் ‘வாழை’ என்ற தலைப்பில் திரைப்படமாக கொண்டு வந்துள்ளார். வாழை திரைப்படத்தில் சிறுவர்கள் வாழைத்தார் தூக்கி கஷ்டப்படும் காட்சிகள், இடைத்தரகர்களால் ஏற்படும் பிரச்னைகள், தண்ணீரில் விழும் காட்சிகள் என என்னுடைய சிறுகதையில் வரக்கூடிய அத்தனை காட்சிகளும் வாழை திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
சினிமாவிற்காக கூடுதலாக வேறு காட்சிகள் படமாக்கியுள்ளனர். மற்றபடி முழுக்க முழுக்க என்னுடைய கதைதான். கரிசல்காட்டு இலக்கிய எழுத்தாளரான நான், வாழை பற்றி எழுத காரணம் என்னுடைய உறவினர்கள் பொன்னங்குறிச்சி பகுதியில் இருந்த பொழுது, அங்கு வாழை லாரியில் ஏற்றி செல்லப்படும். அங்கு சிறுவர்கள் கஷ்டப்படுவதை அவர்களிடம் கேட்டு என் சிறுகதையில் எழுதியுள்ளேன்.
இக்கதையை பயன்படுத்த முறையாக யாரும் அனுமதி பெறவில்லை. என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை. பிரம்மாண்டங்களை காட்டி வெளிவரும் திரைப்படங்களை மக்கள் நிராகரிக்கின்றனர். நல்ல கதை என்ற மட்டும் மக்கள் பார்க்கின்றனர். திரைப்படத்திற்கு ஆதரவு தருகின்றனர். உதாரணத்திற்கு வாழை திரைப்படம்.
Also Read : இரவில் சாப்பிடக்கூடாத 25க்கும் மேற்பட்ட உணவுகள்! நிம்மதியாக தூங்க இதை செய்துதான் ஆக வேண்டும்!
தமிழ் சினிமா தற்போது கமல், ரஜினி, விஜய் போன்ற கதாநாயகர்களை மையப்படுத்திய கதைகளைத் தேடி அவர்களுக்கான கதைகளை உருவாக்கி, அவர்களை நடிக்க வைப்பதால் தான் தோல்வியை தழுவுகின்றன. அவர்களிடம் கால்ஷீட் பெற்றுக் கொண்டு கதையை தேடி அலைகின்றனர். கதை எங்கு நிகழ்கிறதோ அங்கு தான் அதை காட்சிப்படுத்தி திரைப்படமாக எடுக்க வேண்டும். ஒட்டு துணியை பெரக்கி, பட்டு சேலை தைத்து தன் பெயரை வைத்து கொள்வது தான் தற்போதைய இயக்குனர்கள் வேலை.
மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் அவருடைய சொந்த அனுபவம் தான், என்னுடைய கதையும் தான். சிறுவர்கள் படும் வேதனையை, வலியை அடையாளமாக முதன் முதலில் படைப்பாக உருவாக்கியவன் நான் தான். அதற்கு அவர் உயிர் கொடுத்து உள்ளார். வெகுஜன ஊடகத்தின் மூலமாக உயிர் கொடுத்து இருக்கிறார்.
அதனால் வாழை திரைப்படம் லட்சக்கணக்கான பேரிடம் சென்றடைந்துள்ளது. என்னுடைய சிறுகதை இலக்கியமாக ஆயிரம் பேருடன் நின்றுவிட்டது. ஒரு பிரச்னையை, ஒரு சம்பவத்தை ஒரு வடிவமாக்கி, இலக்கியமாக், சிறுகதையாக நாவல்களாக யார் ஒருவர் முதலில் அடையாளம் கொடுத்து புத்தமாக வெளியிட்டு பதிப்புரிமை வைத்திருக்கிறார்களோ, அவருக்குத்தான் அந்த உரிமை செல்லும்” இவ்வாறு எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்தார்.
Also Read : ஏ.சி. அறையில் ஜம்முனு தூங்குற ஆளா? இந்த 6 பிரச்னைகள் வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க..!
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் மாரி. செல்வராஜ், சோ. தர்மன் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் கூறவில்லை. வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும்’ என்று மட்டும் பதிவிட்டுள்ளார்.
வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன்அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி❤️
—
வாழைhttps://t.co/VRFo53NxFn— Mari Selvaraj (@mari_selvaraj) August 28, 2024
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry