சென்டிமென்ட்டையும், அரசியல் தலைவர்களையும் அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது. தற்போது, சென்டிமென்ட் காரணமாக, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி மாறுவது உறுதியாகிவிட்டது.
வடகடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்! வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அர்ச்சகர் நியமனத்தில் சாதிக் குறுக்கீடு கூடாது! ஆகமம், பூஜைகளில் தேர்ச்சிப் பெற்றவர்களை நியமிக்கலாம் என ஐகோர்ட் தீர்ப்பு!
சேலம் சுகவனேஷ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் பணியிடங்களை நிரப்ப கோயில் நிர்வாகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வெளியிடப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
ஈபிஎஸ்-ன் அரசியல் சதுரங்கம்: நெருக்கடியில் திமுக! கூட்டணியில் பதற்றம்!
அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானதால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இது எதிர்பாராத பின்னடியாக மாறியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் பதற்றம் அதிகரித்துள்ளது. திமுகவை நம்பியுள்ள சிறிய கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் திமுக கூட்டணிக்குள் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ரஜினியுடன் மோதும் ஷாரூக்கான்! ஜவான் ரிலீஸ் நாளில் ஓடிடியில் வெளியாகும் ஜெயிலர்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 குறைகிறது! சிலிண்டருக்கு ரூ.200 மானியம்! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைகிறது.
