1956க்கு முன் இறந்திருந்தாலும் தந்தை சொத்தில் பெண்களுக்கு உரிமை! ஸ்மிருதியை மேற்கோள்காட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

0
302

தந்தை சொந்தமாக சம்பாதித்த சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் 1956-ம் ஆண்டுக்கு முன்னரும் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலா என்பவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. அதில், ராமசாமி என்பவரின் அண்ணன் மாரப்பா கடந்த 1949ஆம் ஆண்டு இறந்துவிட்டதாகவும், மாரப்பாவின் மகளும் இறந்து விட்ட நிலையில், அவரது குடும்ப சொத்துக்கள் அனைத்தும் தம்பி வாரிசான ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே சேரும் எனவும், பெண்களுக்கு உரிமை இல்லை எனத் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

1956ஆம் ஆண்டு வாரிசு உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதால், அதற்கு முன்பாகவே மாரப்பா இறந்து விட்டதால், அவருடைய தம்பி மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா என நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை பல கட்டங்களாக விசாரித்த நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், மாரப்பா இறந்ததுமே சொத்து முழுவதும், அவருடைய மகளான குப்பாயம்மாளுக்கு சென்று விட்டதாகக் தெரிவித்தனர். அவரும் இப்போது உயிருடன் இல்லாததால், தற்போதுள்ள சொத்துகள் அனைத்திலும் மாரப்பாவின் தம்பி மகன்களுக்கு மட்டுமின்றி, அவருடைய மகள்களுக்கும் உரிமை உண்டு என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

மேலும் 1956 ஆம் ஆண்டு வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கு முன்பாக இறப்பு ஏற்பட்டு இருந்தாலும், தந்தை உறவு சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பழங்கால நூல்கள், ஸ்மிருதிகள், பல்வேறு புகழ்பெற்ற அறிஞர்களால் எழுதப்பட்ட ஆவணங்கள் மற்றும் நீதித்துறை தீர்ப்புகள் கூட, பெண் வாரிசுகள், மனைவிகள் மற்றும் மகளின் உரிமைகளை அங்கீகரித்துள்ளன என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

கடந்த 1956-ம் ஆண்டு, இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படிமூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்ததுஇதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் பிரிவு 6-ல்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு என அறிவிக்கப்பட்டது

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry