இந்து தலித் சமுதாயத்தினரை கிறிஸ்துவர்களாக மதம் மாற ஊக்குவிக்கும் வகையில், கேரள அரசு சிறப்பு சலுகை அளிக்கிறது. அரசு வேலையிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு பினராயி விஜயன் தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் அரசு வெளியிட்ட அறிவிக்கை சமூக ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தது. அதில், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் விபத்துகால மருத்துவ அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை நசுக்கும் வகையில், அரசே மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தலாமா என்று எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவில் மத ரீதியான இடஒதுக்கீடு அங்கீகரிக்கப்படாத நிலையில், கேரள அரசு சட்டத்தை மீறியுள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
Also Read : 108 ஏக்கர் மலை, ‘ஜெபமலை’ ஆனது எப்படி? வனத்துறை நிலத்தை ஆக்கிரமிப்பதாக மோகன் சி லாசரஸ் மீது பரபரப்பு புகார்!
ஆனால், இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றே தெரிகிறது. ஏனென்றால், மதம் மாறுவோரின் சமூக, கல்வி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார தேவைகளுக்காக என்று கூறி, கேரள அரசு Kerala State Development Corporation for Christian Converts from Scheduled Castes and the Recommended Communities Ltd. என்ற நிறுவனத்தையே நடத்துகிறது.
இந்த நிறுவனமானது கிறிஸ்தவர்களாக மதம் மாறுவோருக்கு சலுகை அளிக்கும் வகையில், விவசாய நிலம் வாங்கவும், வெளிநாட்டு வேலைக்குச் செல்லவும், திருமணத்துக்காகவும், தனி நபர் கடன் உள்ளிட்ட கடன்களை வழங்குகிறது. மதம் மாறி சலுகை பெற தகுதியுள்ளவர்களாக 53 சாதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஆதி திராவிடர், ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா, அருந்ததியர், சக்கிலியான், சண்டாலா, கல்லாடி, குடும்பன், குறவர், மலையான், பள்ளர், பறையர், வள்ளுவன் போன்ற சாதிகள் அந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பழங்குடியினர்களை பொறுத்தவரை, சக்கமார், செம்மன்/செம்மார்,தீவரா/தீவரன், குடும்பி, குசவன், குளாலன், கும்பரன், வேளாளன், ஒட்டன், ஆந்திரா நாயர், ஆந்துரு நாயர், மடிகா, புளையான் வேட்டுவன் மற்றும் கிறிஸ்துவர்களாக மதம்மாறிய பழங்குடியினர் ஆகியோருக்கும் சிறப்பு சலுகை அளிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவர்களாக மதம் மாறினால், அவர்களுக்கு மாநில அரசுப் பணியில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. (லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இவர்கள் வரமாட்டார்கள்). கேரள அரசு நிறுவனம் மூலம் 2010-ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தலித் சமூகத்தினர் வாங்கியிருந்த 159 கோடி ரூபாய் கடனை மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது.
Also Read : கிறிஸ்தவர்களுக்கு இடையே நிலவும் தீண்டாமை! உண்மையை உரைக்கும் சிறப்புக் கட்டுரை!
இத்தகைய நடவடிக்கைகள், இந்து மதத்தை ஒடுக்கி கிறிஸ்துவத்தை மேலோங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளாகவே தெரிகிறது. கேரள அரசானது, அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாக இருக்கிறது என்ற புகார் எழுந்துள்ளது. மதமாற்றத்தை ஊக்குவிக்கும், சட்டத்துக்கு புறம்பான Kerala State Development Corporation for Christian Converts from Scheduled Castes and the Recommended Communities Ltd. நிறுவனத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
(With inputs from OpIndia)
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherryå