வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத்தடை!  பிரச்சனையை தீர்க்க குழு அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி!

0
17

மறு உத்தரவு வரும் வரை புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் குறித்து முடிவெடுக்க 4 பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

டெல்லி எல்லையில், 48-வது நாளாக போராட்ட களத்தில் விவசாயிகள் உறுதியாய் இருக்க, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம் என்று மத்திய அரசும் பிடிவாதமாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் வேளாண்துறையில் இறங்கியிருப்பதால், குறைந்தபட்ச ஆதார விலை அச்சம் விவசாயிகளிடையே மேலும் அதிகரித்துள்ளது. வேளாண் சட்டங்கள், டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகள் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.. போப்டே தலைமையிலான அமர்வு விசாரிதத்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

Also Read : விதைக்கப்பட்ட சந்தேகம் உண்மையாகிறதாவேளாண் சந்தையில் கால்பதிக்கும் ரிலையன்ஸ்! ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் அதானி!

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, “மறு உத்தரவு வரும் வரை புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என உத்தரவிட்டனர். டெல்லியில் தொடரும் போராட்டம் பற்றிய வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள்சட்டங்களின் செல்லுபடியாகும் தன்மை பற்றியும், போராட்டங்களால் பாதிக்கப்பட்ட குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பது குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

எங்களிடம் உள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப பிரச்னையை தீர்க்க முயற்சிக்கிறோம். சட்டத்தை இடைநிறுத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் சட்டத்தை இடைநிறுத்துவது வெற்று நோக்கத்திற்காக இருக்கக்கூடாது. நாங்கள் ஒரு குழுவை அமைப்போம், அது எங்களுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும், அதன்பின்னரே நடவடிக்கை எடுப்போம். பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது, சுமுக தீர்வு காண விரும்புவோர் குழுவிடம் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கட்டும். குழு அமைப்பதை விவசாய சங்கங்கள் ஏற்காது என்பதை நாங்கள் ஏற்கமாட்டோம்என்று தெரிவித்தனர்.

இந்தக் குழுவில் அசோக் குலாட்டி, ஹர்சிம்ராட் மன், அனில் கன்வாட், பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேவேளையில், நாடாளுமன்றத்தில் 2 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இடைக்கால நிவாரணம்தானே தவிர முடிவு அல்ல என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

Previous Post : பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து பற்றிய பரபரப்பு தகவல்! இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் டெல்லி விவசாயிகள் போராட்டம்!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherryå