கட்சி மாறுகிறாரா அதிமுக பாஸ்கர்? முதலியார்பேட்டை தொகுதியில் தகிக்கும் தேர்தல் களம்!

0
96

தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில், புதுச்சேரி பிராந்தியம்,  முதலியார்பேட்டை தொகுதியில் நாளுக்குநாள் விறுவிறுப்பு கூடுகிறது. அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.. பாஸ்கர் கட்சி மாறப்போகிறார் என்பதே அதற்குக் காரணம்.

தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை 90 சதவிகிதம் முடித்துவிட்டன. ஆனால், புதுச்சேரியில், இன்னமும் கூட்டணியே முடிவாகவில்லை. வழக்கம்போல என்.ஆர். காங்கிரஸ் ஆடுபுலியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், முதலியார்பேட்டை தொகுதி சிட்டிங் எம்.எல்.. பாஸ்கர் அதிமுகவில் இருந்து வெளியேறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவரது நெருங்கிய ஆதரவாளர் ஒருவரிடம் பேசியபோது, “முதலியார்பேட்டை தொகுதியில் அடுத்தடுத்து 2 முறை எம்.எல்.. வான பாஸ்கருக்கு, தொகுதியில் அரசியல் எதிரிகளே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால், கலாம் சேவை மையம் வக்கீல் சம்பத் களமிறங்கிய பிறகு சற்றே நிலைமை மாறியது. அவர் திமுகவில் இணைந்தவுடன் களநிலவரம் முற்றிலுமாக மாறிவிட்டது. இதுமட்டுமல்ல, இந்தத் தொகுதியில் தொடர்ந்து 2 முறைக்கு மேல் ஒருவர் வெற்றி பெற்றதில்லை என்ற சென்டிமென்ட் உள்ளது.

உதராணத்துக்கு சபாபதி 10 ஆண்டுகள் எம்.எல்..வாக இருந்தபிறகு, எம்..எஸ். சுப்பிரமணியம் 10 ஆண்டுகள் எம்.எல்..வாக பணியாற்றினார். அதன்பிறகு தற்போது எங்கள் எம்.எல்.. பாஸ்கர் 10 ஆண்டுகள் எம்.எல்..வாக இருந்துவிட்டார். இந்தநேரத்தில்தான், அதிமுகபாஜக கூட்டணியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் வெளியேறுவது எங்களுக்கு பின்னடைவுதான். மற்றொருபுறம், களத்தில் தோன்றியிருக்கும் புதிய அரசியல் எதிரி. இதனால் வெற்றி வாய்ப்பு பாதிக்குமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது

எனவேதான் என்.ஆர். காங்கிரஸில் இணைவது பற்றி தீவிரமாகவே பரிசீலித்து வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை என்.ஆர். காங்கிரஸ் இல்லாமல், அதிமுகபாஜக இணைந்து போட்டியிடுவது எடுபடாது.  எனவேதான் என்.ஆர். காங்கிரஸில் இணையலாம் என்ற முடிவை கிட்டத்தட்ட உறுதிசெய்துவிட்டோம். என்.ஆர்.காங்கிரஸில்  இதே முதலியார்பேட்டை தொகுதியில் களமாடுவோம்.

அரசியல் எதிரி வலுவாகிவிட்டதால்தான், பாஸ்கர் கட்சி மாறுகிறார் என சிலர் பேசுகிறார்கள். அதைப்பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. என்னைப்போன்ற ஆதரவாளர்கள் அவர் கட்சி மாறுவதை ஏற்கிறோம். இதை ஆதரவாளர்கள் கூட்டத்திலும் வெளிப்படுத்தியுள்ளோம். என்.ஆர். காங்கிரஸ் சார்பாக பாஸ்கர் போட்டியிட்டாலும், அவர்தான் வெற்றிபெறுவார், அதில் மாற்றுக்கருத்து இல்லைஎன்று கூறினார்.

இதுபற்றி அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கேட்டபோது, “என்.ஆர். காங்கிரஸ்அதிமுக கூட்டணியில் 2011-ல் பாஸ்கர் போட்டியிட்டபோது, 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016-ல் அதிமுக தனியாகவும், என்.ஆர். காங்கிரஸ் தனியாகவும் போட்டியிட்டது. அதில் பாஸ்கர் 14,321 வாக்குகளும், என்.ஆர். காங்கிரஸ் பாலன் 8,934 வாக்குகளும் பெற்றனர். வெற்றி வித்தியாசம் 5,387 வாக்குளாக சரிந்தது.

அண்மையில் நாளிதழ் ஒன்றில், பாஸ்கரும், அவரது அண்ணன் அன்பழகனும் கட்சி மாறுவதாக எழுதியிருந்தார்கள். அதிமுகவில் சீனியரான அன்பழகன் கட்சி மாறுவாரா? என்பதே எங்களது சந்தேகமாக இருந்தது. தான் கட்சி மாறுவதாக வெளியான செய்தி தவறு என திட்டவட்டமாக மறுத்த அன்பழகன், தனது தம்பி பற்றி எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

14 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுக்கொடுத்த கட்சியில் இருந்து 9 ஆயிரம் வாக்குகள் பெற்ற என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு, பாஸ்கர் தாவுவதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அவர் கட்சி மாறினால், தோல்வி பயமே இதற்குக் காரணம் என எதிர்தரப்பினர் பிரச்சாரம் செய்வார்கள். இதை உணர்ந்து பாஸ்கர் சிந்தித்து செயல்படுவார் என்று நம்புகிறோம்என்றார்.

கட்சியினர், அரசியல் விமர்சகர் என பவரும் தங்களது கருத்தை, பார்வையை முன்வைத்தாலும், வாக்காளர்களின் நாடித்துடிப்பை அறிந்து களப்பணி செய்பவர்களாலேயே வெற்றியை வசப்படுத்தமுடியும். வாக்காளர்கள் எனும் எஜமானர்கள், தங்களுக்கு சேவகனாக யாரை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்பதை ஏப்ரல் 6-ந் தேதியே ஓரளவுக்கு கணித்துவிட முடியும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry