200 தொகுதிகளில் கூட காங். போட்டியிடலாம்! திமுக-விடம் 25 தொகுதிகள் பெற்ற கே.எஸ். அழகிரி சூளுரை!

0
18

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் இந்த தடவை 180 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டும் என்று தி.மு.. முடிவு செய்துள்ளது. .தி.மு.., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 3 கட்சிகளுக்கும் தலா 6 இடங்களை தி.மு.. ஒதுக்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால் தி.மு.. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் கடந்த சில தினங்களாக இழுபறி ஏற்பட்டது. காங்கிரஸ் தரப்பில் 30 முதல் 35 தொகுதிகள் வரை எதிர்பார்த்தனர். ஆனால் தி.மு.. தலைவர்கள் அதை ஏற்க திட்டவட்டமாக மறுத்ததால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது. ‘நாம் எதிர்பார்க்கும் தொகுதிகளை தி.மு.. தராவிட்டால் கூட்டணியில் இருந்து விலகலாம்என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். உடன்பாடு ஏற்படாததால் அழகிரி கண்ணீர் விட்டார்.

சிக்கலுக்கு தீர்வு காண நேற்று இரவு மு..ஸ்டாலின் முடிவு செய்தார். காங்கிரஸ் தலைவர்களுக்கு உடனடியாக அழைப்பு விடுத்தார். அதை ஏற்று நேற்று இரவு 11 மணியளவில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் மு..ஸ்டாலின் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் மு..ஸ்டாலினுடன் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் மு..ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். சுமார் 20 நிமிடம் அவர்கள் இருவரும் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்தனர். அப்போது தி.மு.., காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் தி.மு.. தலைவர் மு..ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கையெழுத்திட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.. கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவும் தி.மு.. ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “மதச்சார்பின்மை வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்படுகிறோம். சமூகநீதிக்கு எதிராக இருக்கும் சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சி மட்டுமே. வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம். சமூக நீதிக்கு எதிராகச் செயல்படும் சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்தத் தேர்தல் வெறுமனே ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்பதற்கான தேர்தல் அல்லஇவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry