ஏர்டெல்லை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது வோடாபோன்! கவனம் ஈர்க்கும் ரிலையன்ஸ் ஜியோ!

0
94

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. ஆனால், ஜியோ கட்டணத்தை உயர்த்தாததால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

பார்தி ஏர்டெல்(Airtel) தொலைத்தொடர்பு நிறுவனம் அதன்பிரீ பெய்டுசேவைக்கான செல்போன் கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. 28 நாட்களுக்கு ரூ.79 என்று இருக்கும் கட்டணத்தை ரூ.99 என்றும், ரூ.149 கட்டணத்தை ரூ.179 எனவும், ரூ.219 கட்டணத்தை ரூ.265 ஆகவும் உயர்த்தியுள்ளது. 1 வருடத்துக்கு ரூ.2,498 என்று இருக்கும் கட்டணத்தை ரூ.2,999 ஆக அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 26-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 28 நாட்கள் கொண்ட குறைந்தபட்ச கட்டணம் ரூ.79 ஆக உள்ளது. அது ரூ.99 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.149 கட்டணம் ரூ.179 ஆகவும், ரூ.219 கட்டணம் ரூ.265 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 1 வருடத்துக்கான கட்டணம் ரு.2,399-ல் இருந்து ரூ.2,899 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 20 முதல் 25 சதவீதம் வரை கட்டண அறிவிப்பை வோடபோன் ஐடியா நிறுவனம் அதிகரித்துள்ளது. அன்லிமிடெட் அழைப்புகள் குறித்த திட்டங்களில் 20 சதவீதம் முதல் 23 சதவீதம் என்ற அளவுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல 149 ரூபாயிலிருந்த ஆரம்ப வாய்ஸ் அன்லிமிட்டட் பிளான்  179 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

செல்போன் சேவை உயிர்ப்புடன் இருக்க கட்டண உயர்வு அவசியம் என வோடபோன் ஐடியா தலைமை அதிகாரி ரவீந்தர் தக்கர் கூறியுள்ள நிலையில், உலக அளவில் இந்தியாவில்தான் செல்போன் சேவைக்கு மக்கள் குறைவாக செலவிடுகிறார்கள்; சில மேற்கத்திய நாடுகளில் செல்போன் சேவைக்கு ஒவ்வொரு வாடிக்கையாளரும் மாதம் ரூ.5 ஆயிரம் வரை செலவழிக்கிறார்கள்; 200 ரூபாய்க்கு கீழ் மாதாந்திர கட்டணம் வைத்திருந்தால் யாரும் இந்த துறையில் நீடிக்க முடியாது என்கிறார் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமானகிரிசில்கூறுகையில், அடுத்த ஆண்டு நடைபெற வாய்ப்புள்ள 5ஜி ஏலத்தில் அலைக்கற்றைகளை ஏலம் எடுக்க செல்போன் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இதன் காரணமாக கட்டண உயர்வை அறிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரையில் ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio) ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவிக்கவில்லை. ஒரு பயனருக்கு சராசரி வருவாய் (ARPU) மற்றும் செயலில் உள்ள சந்தாதாரர் சதவீதம் ஏர்டெல்லை விட குறைவாக இருந்தாலும், ஜியோ ஏற்கனவே பெரும் லாபம் ஈட்டி வருவது இதற்குக் காரணமாக இருக்கலாம். நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் விலையை உயர்த்தியிருப்பது அதன் வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

ஏர்டெல், வோடஃபோன், ஜியோ நிறுவனங்களின் அடிப்படை பிளான்களில் உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம். ஏர்டெல்ஆரம்ப பிளான்(28 நாள்கள் வேலிடிட்டி) ரூ.179-ல் 100 SMS மற்றும் ஒருநாளைக்கு 1GB டேட்டா, ரூ.299 பிளானில் 100 SMS மற்றும் ஒருநாளைக்கு 1.5 GB டேட்டா, ரூ.359 100 SMS மற்றும் ஒருநாளைக்கு 2GB டேட்டா.

ரிலையன்ஸ் ஜியோ – 24 நாள்கள் வேலிடிட்டி உள்ள ரூ.149 பிளானில் 100 SMS மற்றும் ஒருநாளைக்கு 1GB டேட்டா கிடைக்கும். 28 நாள்கள் வேலிடிட்டி விவரம் – ரூ.199 பிளானில் 100 SMS மற்றும் ஒருநாளைக்கு 1.5 GB டேட்டா, ரூ.249 பிளானில் 100 SMS மற்றும் ஒருநாளைக்கு 2 GB டேட்டா, ரூ.349 பிளானில் 100 SMS மற்றும் ஒருநாளைக்கு 3 GB டேட்டா.

வோடஃபோன் ஐடியா: 28 நாள் வேலிடிட்டிரூ.299 பிளானில் ஒருநாளைக்கு 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1.5 GB டேட்டா, ரூ.359 பிளானில் ஒருநாளைக்கு 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 2GB டேட்டா.

84 நாள் வேலிடிட்டியில் ஒப்பீடு

ஏர்டெல் இதில் மூன்று பிளான்களை கொடுக்கிறது. ரூ.455க்கு 6GB டேட்டா. ரூ.719க்கு ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா, ரூ.839க்கு ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா.

ரிலையன்ஸ் ஜியோரூ.555க்கு ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா, ரூ.888க்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டா, ரூ.999க்கு ஒரு நாளைக்கு 3GB டேட்டா.

வோடபோன் ஐடியா – ரூ.719க்கு ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா, ரூ.839க்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டா, ரூ.459க்கு மொத்தம் 6GB டேட்டா.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*