‘தல’ என்று அழைக்க வேண்டாம்! ஊடகத்தினர், ரசிகர்களுக்கு அஜித்குமார் வேண்டுகோள்!

0
83

தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார் “தல“, “அல்டிமேட் ஸ்டார்“, “காதல் மன்னன்” என்ற பெயர்களில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

தமிழில் ஒரு முன்னணி நடிகராகவும்சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும்உலகளவில் பிரபலமான ஒரு எஃப் 1 ரேஸர்(F1 Racer) ஆகவும், பொறியாளராகவும் புகழ் பெற்றுள்ளார். அதேபோல் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியராகவும், மாநில அளவில்  துப்பாக்கிச்சுடும் போட்டியிலும் அவர் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார்.

1992 ஆம் ஆண்டு “பிரேம புஸ்தகம்” என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அஜித்குமார் அறிமுகமானார். பின்னர் அமராவதி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  முதல் படம் வெற்றிபெறல்லைஅடுத்த ஆண்டில் பாசமலர்கள்பவித்ராராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார்இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.

அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம்ஆசை“. இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் இயக்குனர் சரணின்காதல் மன்னன்எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இவரைகாதல் மன்னன்என்று ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர்.

பின்னர் 2001 ஆம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ப்ளாக் பஸ்டர் படமாக வெற்றி பெற்றதீனா திரைப்படத்தில் இவர் ஏற்ற வேடம்  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. 2001-லிருந்து அஜித்குமாரை அவரது ரசிகர்கள்தலஎன்றே அழைக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதியோடு, அவர் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்நிலையில், தன்னைதலஉள்ளிட்ட எந்தப் பட்டப்பெயருடனும் அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களை அஜித்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாக, ஊடகத்தின், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். சுரேஷ் சந்திராவின் டிவிட்டர் பதிவில், இனி வரும் காலங்களில் தன்னைப் பற்றி எழுதும்போதோ, குறிப்பிட்டு பேசும்போதோ, எனது இயற்பெயரான அஜித்குமார், அஜித் அல்லது A.K. என்று குறிப்பிட்டால் போதுமானது.  தல என்றோ, வேறு ஏதாவது பட்டப்பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.  உங்கள் அனைவரின் அனைவருக்கும் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று அஜித்குமார் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube & Telegram & Tamilnadu & Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*