இந்து தெய்வங்கள், அக்னிகலசம் குறித்து தரம்தாழ்ந்த விமர்சனம்! டாக்டர் ஷாலினி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!

0
202

சிவபெருமானின் நெற்றிக்கண், பெருமாளின் திருமண் ஆகியவற்றை டாக்டர் ஷாலினி கேவலமான முறையில் சித்தரித்துள்ளார். மேலும் அக்னி கலசத்தில் இருந்து வந்ததாக நம்பும் வன்னியர்களையும் அவர் சிறுமைப்படுத்தியுள்ளார்.

நாத்திக பிரச்சாரத்தாலும், ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் மதச் சின்னங்கள் தரிப்பது அசிங்கம் போலவும், அவமானச் சின்னமாகவும் மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரச்சாரம் இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சிவனின் நெற்றியிலுள்ள மூன்றாவது கண் என்பது ஆண்குறியின் சின்னம், அதேபோல் பெருமாள் நெற்றியில் வரைந்திருக்கும் நாமம் பெண்குறியின் சின்னம் என்று மருத்துவர் ஷாலினி கூறியுள்ளார். பெண்ணுறுப்பில் இருந்து மட்டுமே பிள்ளை பிறக்காது, ஆண்களின் நெற்றியில் இருந்தும் பிள்ளை பெற்றெடுக்க முடியும் என்பதை காட்டுவதற்காகவே இப்படிப்பட்ட குறியீடுகள் வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்து தெய்வங்களைக் குறிப்பிடுகையில், அவர்களது தேவிமார்களையும் உள்ளடக்கியே கூறுகிறோம். ஆதலால் இதனை ஓர் ஆண் பேரினவாதம் என்று சொல்வது பிதற்றல். சக்தி இல்லையேல் சிவனில்லை. ராமனிருக்கும் இடத்தில்தான் சீதையும் இருக்கிறாள். கண்ணனைப் பற்றி நினைக்கையிலேயே ராதை, ருக்மிணி, சத்யபாமை முதலானவர்களை நினைக்கத் தோன்றுகிறது. சிவனை கௌரிசங்கரன் என்றும், ராமனை சீதாராமன் என்றும், கிருஷ்ணனை ராதாகிருஷ்ணன் என்றும் போற்றுகிறோம்.

வெறும் நெற்றி பாழ் என்று முன்னோர் சொல்வார்கள். இந்து சமயத்தில் சைவ நெறியை பின்பற்றுபவர்கள் திருநீறும், வைணவத்தை பின்பற்றுபவர்கள் திருமண்ணால் நாமமும் இட்டுக்கொள்வது மரபு. பெருமாளின் பாதங்கள் திருமண்ணாக அணியப்படுகிறது. நெற்றியில் திருமண் இடுவதற்கு நாமம் போடுவது என்று பெயர். இதனை திருமண் காப்பு தரித்தல் என வைணவர்கள் கூறுகிறார்கள். திருமண் என்னும் திருநாமம் நாராயணனின் பாதங்களை குறிக்கும். நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஆதார கருத்து.

ஸ்ரீ சுர்ணம் என்ற திருமண் மகாலக்ஷ்மியை குறிக்கிறது. இந்த மண் தெய்வீகமான இடங்களிலேயே கிடைக்கும். துணியை வெளுப்பது உவர் மண், மனதை வெளுப்பது திருமண் என்பார்கள்.  நம் உடல் ஒரு நாள் இந்த மண்ணோடு மண்ணாகிப் போகும் என்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் விதமாக திருமண் அணியப்படுகிறது. அதனால் ஸ்ரீமன் நாராயணின் திருப்பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள் என்பதை அறிவுறுத்துவது தான் திருமண் காப்பாகும்.

சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ வழிபாடுகளுக்குள் தலைமையானது சிவ வழிபாடு ஆகும்சிவபெருமானை சங்க இலக்கியங்கள் முக்கட் செல்வன் என்றும் குறிப்பிடுகின்றன. அகநானூற்றுப் பாடல் ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்என்று ஈசனை குறிக்கிறது.  சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானது தனித்துவ அடையாளங்களில் நெற்றிக்கண்ணும் ஒன்றாகும். இதன் காரணமாக இவர் முக்கண்ணன் என்றும், நெற்றிக்கண்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.

மேல் நோக்கிய நிலையில் நிமிர்ந்து நிற்கும் நெற்றிக்கண் சிவபிரானின் தனிப்பெரும் முதன்மையை உணர்த்துவது. இது சிவபெருமானின் சிறப்பு அடையாளம். இது ஞானத்தின் உச்சத்தை குறிக்கும். மேலும் சிவனின் நெற்றிக் கண்ணானது கோபம், நெருப்பு, ‘லயம்ஆகியவற்றின் சின்னமாகும். இதனாலேயே நாம் சிவனை த்ரிநேத்திரன் என்றும் விரூபாக்ஷன் என்றும் அழைக்கிறோம். நிலவின் குளிர்ச்சியையும், நெற்றிக்கண்ணின் வெப்பத்தையும் எவ்வாறு ஒரே இடத்தில் காண முடியும்? இது வியப்பளிக்கலாம். ஆனால் இது நமக்கேகூட நடக்கக்கூடிய ஒன்றேஒரு நொடியில் சாந்தமாகவும், அடுத்த நொடியில் ஆக்ரோஷத்துடனும் நடந்துகொள்கிறோமே? சாந்தமும் தேவை, கோபமும் தேவை.

குண்டலினி  சக்தியை மேலே எழுப்பி தலையின் நடு உச்சி பகுதிக்கு கொண்டு வரும்போது அளப்பரிய ஞானம் தோன்றும். அப்போது நெற்றிக் கண்ணும் திறக்கும். மேலும் நெற்றிக்கண் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், நமக்குப் பின்னால் இருக்கும் பிரச்னைகளையும் எதிர்கொண்டு அதை தகர்த்தெறிந்து, முடியாது என்பவற்றை முடித்துக்காட்ட வேண்டும் என்பதாகும்.

இதேபோல், இந்தியாவின் மன்னர் பரம்பரையினர், போர் வீரர்கள் தம்மை சூரியவம்சம், சந்திரவம்சம், அக்னிவம்சம் என்று கூறிக்கொண்டனர். அந்த மரபின் படியே வன்னியர்கள் தம்மை அக்னி வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில், வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள் என்பது நம்பிக்கை ஆகும். ‘அக்னி வம்சம்என்கிற கருத்தாக்கம், அதாவதுயாகத்தீயில் இருந்து அவதாரம் எடுக்கும் நிகழ்வுபுறநானுறு காலத்தில் இருந்தே தமிழர் வரலாற்றில் உள்ளது. அக்காலத்தில் வடதமிழ்நாடுவன்னியர் ராஜ்யம்என்று பெயர்பெற்றிருந்ததுவன்னிய நாட்டை வெற்றி கொள்வதும், வன்னிய ராஜாக்களை வெல்வதும் விஜயநகரப் படையெடுப்பின் நோக்கம் என்று கங்காதேவியின் மதுராவிஜயம் எனும் சமஸ்கிருத காவியம் குறிப்பிடுகிறதுஅதே போன்று இலங்கையிலும் வன்னியர் ஆட்சி சிறப்பு பெற்றிருந்ததை இலங்கையின் வையா பாடல் குறிப்பிடுகிறது.

ஆனால் இதுபற்றி தெரியாமல், அல்லது மறைத்துவிட்டு, தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளை இழிபடுத்துவதையே ஷாலினி போன்றோர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். நெற்றிக் கண் மற்றும் திருமண்ணின் தத்துவம் தெரியவில்லை என்றால், சமய சான்றோர்களிடமோ, புத்தகங்கள் மூலமாகவோ தெரிந்துகொண்டிருக்கலாம். அதைவிடுத்து, தனக்குத் தெரியாதது எதுவுமில்லை என்ற ரீதியில் பேசிவரும் ஷாலினி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.  இதேபோல் இந்து அமைப்புகளும் டாக்டர் ஷாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பொதுவெளியில் மன்னிப்பு கோராவிட்டால் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*